இந்தியக் குடியரசுத் தலைவர்

இந்தியாவின் சம்பிரதாயத் தலைவர்
(இந்திய ஜனாதிபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆவார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்
Bhārat ke Rāṣṭrapati
தற்போது
திரௌபதி முர்மு

25 சூலை 2022 (2022-07-25) முதல்
பதவிஅரசுத் தலைவர்
வாழுமிடம்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
புதுப்பிக்கவல்லது
அரசமைப்புக் கருவிஇந்திய அரசியலமைப்பு (பிரிவு 52)
முதலாவதாக பதவியேற்றவர்இராசேந்திர பிரசாத் (1950–1962)
உருவாக்கம்26 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-26)
முதலாமவர்இராசேந்திர பிரசாத்
துணை குடியரசுத் தலைவர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
ஊதியம் 5,00,000 (US$6,300) (மாதத்திற்கு)
60,00,000 (US$75,000) (ஆண்டுதோறும்)[1]
இணையதளம்presidentofindia.gov.in இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

தோற்றம்

 
குடியரசுத் தலைவரின் சின்னம்

ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்தை அடைந்தது, ஆரம்பத்தில் காமன்வெல்த் நாடுகளுக்குள் ஓர் ஆதிக்கமாக ஆறாம் ஜோர்ஜ் ராஜாவாக இருந்தார், இவரே இந்நாடுகளுக்கு கவர்னர் மற்றும் ஜெனரலாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார். இருப்பினும், இதைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சபை, அம்பேத்கரின் தலைமையில், நாட்டிற்கு முற்றிலும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொண்டது. இந்திய அரசியலமைப்பு இறுதியில் நவம்பர் 26, 1949 இல் இயற்றப்பட்டு, 26 ஜனவரி 1950 இல் நடைமுறைக்கு வந்தது மற்றும் இந்தியா குடியரசு நாடாக மாறியது. மன்னர் மற்றும் கவர்னர் ஜெனரல் அலுவலகங்கள், இந்திய குடியரசுத் தலைவரின் புதிய அலுவலகத்தால் மாற்றப்பட்டன, இராசேந்திர பிரசாத் அதன் முதல் பதவியில் இருந்தார்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் சட்ட விதிகளை பாதுகாக்கவும் இந்திய அரசியலமைப்பு, குடியரசுத் தலைவருக்கு பொறுப்பு மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

தகுதிகள்

  • 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின், உறுப்பினராவதற்கான தகுதி பெற்றிருக்கவேண்டும்.
  • ஊதியம் /இலாப பங்கீடு பெற்று எந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் பணிபுரியக்கூடாது.

அதிகாரங்கள் மற்றும் பணிகள்

சட்டமுறை அதிகாரங்கள்

  • குடியரசுத்தலைவர் இந்தியப் நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாவார்.
  • நாடாளுமன்ற அவைகளை கூட்டுதல், கூட்டமுடிவில், கூட்டநிறைவை அறிவிப்பை வெளியிடும் அதிகாரம், மக்களவையின் பதவிகாலம் முடியும்போதோ அல்லது பிற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவோ மக்களவையை கலைக்கும் அதிகாரம், சட்டவரைவு மீது இரண்டு அவைகளுக்கும் இடையே எழும் முரண்களை நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதிற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் போன்ற அதிகாரங்கள் குடியரசுத்தலைவருக்கு உண்டு. 
  • பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும், ஆண்டுத் தொடக்கத்தில்  நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.  
  • இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவைகளில் நடைமுறை அனுபவமுள்ள 12 பேரை மாநிலங்களைவை உறுப்பினராக நியமனம் செய்கிறார்.
  • பிரதிநிதித்துவம் போதாது என்று எண்ணும் வேளையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தை சேர்ந்த இருவரை மக்களவைக்கு நியமனம் செய்கிறார். 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக கேள்வி எழும்போது தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் உறுப்பினரை தகுதிநீக்கம் செய்கிறார்.
  • சிலவகை சட்டவரைவுகளை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யும்போது குடியரசுத்தலைவரின் பரிந்துரை அல்லது அனுமதி அவசியமாகும். அவசியம்.  
  • சட்டவரைவுகள் ஈரவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெரும்போதே அது சட்டமாகிறது. 
  • நாடாளுமன்றம் கூடாத நேரங்களில் தேவையிருப்பின் அவசர சட்டங்களை பிறப்பிக்கிறார். இது ஒரு நாடாளுமன்ற சட்டம் போலவே கருதப்படும். இருப்பினும் இவ்வகை அவசர சட்டங்கள் மறுமுறை நாடாளுமன்றம் கூடியவுடன் ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டியது அவசியம். 
  • தலைமை தணிக்கை அலுவலர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழு போன்ற அமைப்புகளின் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கிறார்.
  • இந்த தருவாயில் குடியரசுத்தலைவர் அந்த சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், நடவடிக்கை ஏதுமின்றி கிடப்பில் வைக்கலாம் அல்லது அது சட்டவரைவை திருப்பிவிடலாம் (எனினும் பணம் சார்ந்த சட்டவரைவை திருப்பிவிட வழிமுறையில்லை). 

செயல்முறை அதிகாரங்கள்

நீதித்துறை அதிகாரங்கள்

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமனம் செய்தல்.

நியமன அதிகாரங்கள்

கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.

நிதி அதிகாரங்கள்

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நிதி ஆணையத்தை நிறுவி மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கான நிதியை பகிர்வார்.

இராணுவ அதிகாரங்கள்

இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.

மன்னிக்கும் அதிகாரங்கள் ஷரத்து 72

உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.

அவசரநிலை பிரகடன அதிகாரங்கள்

தேசிய அவசரநிலை பிரகடனம்

போர், வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சி போன்ற சூழல்களில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தேசிய அவசரநிலையை வெளியிடுகிறார்.

மாநில அவசரநிலை பிரகடனம்

நிதிசார் அவசரநிலை பிரகடனம்

குடியரசுத் தலைவர் ஆட்சி

அதிகபட்சமாக மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 முறையும், பிகார், பஞ்சாப் மாநிலங்களில் தலா 8 முறையும், புதுச்சேரி, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 6 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.அசாமில் 4, டெல்லி 1, கோவா 5, ஹரியாணா 3, ஹிமாச்சல பிரதேசம் 2, ஜம்மு & காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 3, கேரளா 5, மத்திய பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 2, மிஜோரம் 3, நாகாலாந்து 4, ராஜஸ்தான் 4, சிக்கிம் 2, திரிபுரா 3, தமி­­ழ்நாடு 4, மேற்கு வங்கம் 4 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது.[2]

தேர்தல் முறை

குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநிலங்களின் கீழ்ச்சபைகளின் உறுப்பினர்களால் மறைமுக ஒற்றை மாற்று விகிதாச்சார முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இந்தியா ஜனவரி 26, 1950ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன.[3] இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் குழுவினால் (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்படும்.[4] 1952 தேர்தல் சட்டம் 1974 மற்றும் 1977ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் குழு வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இந்தியக் குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால் குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர் குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.

வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின்படி தேர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல் தெரிவாகத் தேர்ந்தெடுத்திருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தேர்தல் குறித்த மேல் முறையீடுகளை நேரடியாக உச்ச நீதி மன்றத்தில் முறையிட வேண்டும்.

வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "President, Vice President, Governors' salaries hiked to Rs 5 lakh, Rs 4 lakh, Rs 3.5 lakh respectively". Indo-Asian News Service. Times Now News. 1 February 2018 இம் மூலத்தில் இருந்து 2 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180202190054/http://www.timesnownews.com/india/article/arun-jaitley-budget-speech-2018-president-salary-vice-president-salary/194462. 
  2. என். மகேஷ் குமார் (1 மார்ச் 2014). "41 ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "The presidential and vice-presidential elections act, 1952". Archived from the original (PDF) on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
  4. 2007 presidential elections

வெளி இணைப்புகள்