இந்திய வாக்காளர் குழு

இந்தியாவின் வாக்காளர் குழு (Indian electoral college) என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.

பதிவு:

தொகு

வாக்காளர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

குறிப்பு: நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.

ஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)

அதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

வரிசை மாநிலம் சட்டமன்றத் தொகுதிகள் (elective) மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[2] மக்கள்தொகை (1971 கணக்கெடுப்பு) ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு மாநிலத்தின் மொத்த வாக்கின் மதிப்பு
1. ஆந்திரப் பிரதேசம் 294 84,665,533 43,502,708 148 43,512
2. அருணாச்சலப் பிரதேசம் 60 1,382,611 467,511 8 480
3. அசாம் 126 31,169,272 14,625,152 116 14,616
4. பீகார் 243 103,804,637 42,126,236 173 42,039
5. சத்தீஸ்கர் 90 25,540,196 11,637,494 129 11,610
6. கோவா 40 1,457,723 795,120 20 800
7. குஜராத் 182 60,383,628 26,697,475 147 26,754
8. அரியானா 90 25,353,081 10,036,808 112 10,080
9. இமாச்சலப் பிரதேசம் 68 6,856,509 3,460,434 51 3,468
10. சம்மு காசுமீர்* 87 12,548,926 6,300,000 72 6,264
11. ஜார்கண்ட் 81 32,966,238 14,227,133 176 14,256
12. கர்நாடகா 224 61,130,740 29,299,014 131 29,344
13. கேரளா 140 33,387,677 21,347,375 152 21,280
14. மத்தியப் பிரதேசம் 230 72,597,565 30,016,625 131 30,130
15. மகாராஷ்டிரா 288 112,372,972 50,412,235 175 50,400
16. மணிப்பூர் 60 2,721,756 1,072,753 18 1,080
17. மேகாலயா 60 2,964,007 1,011,699 17 1,020
18. மிசோரம் 40 1,091,014 332,390 8 320
19. நாகலாந்து 60 1,980,602 516,449 9 540
20. ஒரிசா 147 41,947,358 21,944,615 149 21,903
21. பஞ்சாப் 117 27,704,236 13,551,060 116 13,572
22. ராஜஸ்தான் 200 68,621,012 25,765,806 129 25,800
23. சிக்கிம் 32 607,688 209,843 7 224
24. தமிழ்நாடு 234 72,138,958 41,199,168 176 41,184
25. திரிபுரா 60 3,671,032 1,556,342 26 1,560
26. உத்தரகண்ட் 70 10,116,752 4,491,239 64 4,480
27. உத்தரப்பிரதேசம் 403 199,581,477 83,849,905 208 83,824
28. மேற்கு வங்கம் 294 91,347,736 44,312,011 151 44,394
29. தேசிய தலைநகர் பகுதி, தில்லி 70 16,753,235 4,065,698 58 4,060
30. புதுச்சேரி 30 1,244,464 471,707 16 480
மொத்தம் 4120 1,210,193,422 516594706 516900

(*) அரசியலமைப்பு (சம்மு & காசுமீரில் பயன்பாடு ) ஆணை

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு = சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.

ஒவ்வொரு வாக்கின் மதிப்பு = 549474/776 = 708
நாடாளுமன்றத்திற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு = 549408
  • மொத்த வாக்காளர்கள் = சட்டமன்ற + நாடாளுமன்ற உறுப்பினர்கள் = 4896
  • மொத்த வாக்குகளின் எண்ணிக்கை =1098882

மூலம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வாக்காளர்_குழு&oldid=2972703" இலிருந்து மீள்விக்கப்பட்டது