சிக்கந்தராபாத்

(செக்கந்திராபாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிக்கந்தராபாத் அல்லது செக்கந்திராபாத், ஒலிப்பு (தெலுங்கு: సికింద్రాబాద, உருது: سکندرآباد) இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தின் வடக்கே உள்ளது. இது ஐதராபாத் நகரின் இரட்டை நகரமாக பரவலாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய படைத்தளமாக உருவாக்கப்பட்ட இந்நகரம், ஆசப் சாகி அரச குடியின் மூன்றாம் நிசாமான சிக்கந்தர் சா என்பவரின் பெயரை முன்வைத்து சிக்கந்தராபாத் என்று பெயரிடப்பட்டது. சிக்கந்தராபாத் நகரம் ஐதராபாத் நகரத்தில் இருந்து உசேன் சாகர் ஏரியால் பிரிந்திருந்தாலும், இன்று, ஐதராபாத் மாநகரின் ஒரு பகுதியாகவே மாறி உள்ளது. மாநிலத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கு, இரு நகரங்களும் இணைந்து ஐதராபாத் என்ற மாநகரமாகவே அறியப்படுகிறது. இரண்டு நகரங்களும் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் வெவ்வேறு வரலாறும் பண்பாட்டுப் பின்னணியும் கொண்டுள்ளன. 1948 வரை, சிக்கந்தராபாத் பிரித்தானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. ஐதராபாதோ நிசாம் அரசின் தலைநகராக விளங்கியது.[1]. இந்தியாவின் மிகப் பெரிய படைத்தளங்களில் ஒன்றான சிக்கந்தராபாதில், இந்திய இராணுவ தரைப்படையும் வான் படையும் பெரிய அளவில் நிலை கொண்டுள்ளன. [2][3]

சிக்கந்தராபாத்
—  நகரம்  —
சிக்கந்தராபாத் நகரின் புகழ்பெற்ற சின்னங்களில் ஒன்றான மணிக்கூண்டு
சிக்கந்தராபாத் நகரின் புகழ்பெற்ற சின்னங்களில் ஒன்றான மணிக்கூண்டு
சிக்கந்தராபாத்
இருப்பிடம்: சிக்கந்தராபாத்

, தெலுங்கானா

அமைவிடம் 17°27′N 78°30′E / 17.45°N 78.5°E / 17.45; 78.5
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ஐதராபாத்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி சிக்கந்தராபாத்
மக்கள் தொகை 2,04,182 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


543 மீட்டர்கள் (1,781 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.ghmc.gov.in

உசாத்துணைகள் தொகு

  1. "சிக்கந்தராபாத் வரலாறு". Archived from the original on 2008-02-24. பார்க்கப்பட்ட நாள் 2011-03-15.
  2. http://www.indiastudychannel.com/experts/13416-Whats-difference-between-Cantonment-Municipality.aspx
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-13. பார்க்கப்பட்ட நாள் 2011-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கந்தராபாத்&oldid=3553741" இலிருந்து மீள்விக்கப்பட்டது