விஷ்ணுராம் மேதி

விஷ்ணுராம் மேதி (Bishnuram Medhi, அசாமிய மொழி: বিষ্ণুৰাম মেধি, பிஷ்ணுராம் மேதி) (ஏப்ரல் 24, 1888–சனவரி 21, 1981) அசாமின் முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை[1] பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரரும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார். [2]

இளமை வாழ்க்கை தொகு

விஷ்ணுராம் மேதி குவஹாத்தி அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார்.[3] பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும் முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.

இந்திய விடுதலை இயக்கம் தொகு

விஷ்ணுராம் இந்திய தேசிய காங்கிரசில் 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

விடுதலைக்குப் பிந்தைய அரசியல் தொகு

1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது கோபிநாத் போர்டோலாய் அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். [5] 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.[5]

இறப்பு தொகு

விஷ்ணுராம் மேதி தமது 92ஆம் அகவையில் சனவரி 21, 1981இல் இயற்கை எய்தினார்.[6]

நினைவு அஞ்சற்றலை தொகு

விஷ்ணுராம் மேதி நினைவாக இந்திய அஞ்சல் துறை 24.4. 1989 ல் அஞ்சற்றலை வெளியீடு செய்தது.[7][8][9]

மேற்சான்றுகள் தொகு

  1. Assam Chief Ministers List
  2. Past Governors
  3. "Esteemed Students of the Cotton Collegiate School". Cotton Collegiate Alumni.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "History of the Assam Pradesh Congress Committee". Assam pradesh Congress Committee.
  5. 5.0 5.1 "States of India since 1947". Wporldstatesmen.
  6. http://www.iaslic1955.org/bishnu_ram_medhi.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுராம்_மேதி&oldid=3603923" இலிருந்து மீள்விக்கப்பட்டது