விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு

விக்டர் அலெக்சாண்டர் ஜான் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு (Victor Alexander John Hope, 2nd Marquess of Linlithgow) (24 செப்டம்பர் 1887 -5 சனவரி 1952) 1936 முதல் 1943 வரை இந்தியாவின் தலைமை ஆளுநராகவும் வைசிராயாகவும் பணியாற்றிய ஓர் பிரித்தானிய அரசியல்வாதி ஆவார்.

த மோஸ்ட் ஆனரபள்
லின்லித்கொ பிரபு

கேஜி, கேட்டி, ஜிசிஎஸ்ஐ, ஜிசிஐஈ, ஓபிஈ, டிடி, பிசி
இந்திய வைசிராய்
பதவியில்
18 ஏப்ரல் 1936 – 1 அக்டோபர் 1943
ஆட்சியாளர்கள்எட்வர்டு VIII
ஜார்ஜ் VI
பிரதமர்இசுடான்லி பால்ட்வின்
நெவில் சாம்பர்லைன்
வின்ஸ்டன் சர்ச்சில்
முன்னையவர்வில்லிங்டன் பிரபு
பின்னவர்வேவல் பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 செப்டம்பர் 1887
தென் குயின்ஸ்பெர்ரி, லின்லித்கொசையர், இசுக்காட்லாந்து
இறப்பு5 சனவரி 1952(1952-01-05) (அகவை 64)
தென் குயின்ஸ்பெர்ரி, லின்லித்கொசையர், இசுக்காட்லாந்து
துணைவர்(கள்)டோரீன் மௌட் மில்னர்
(1911–1952)

இளமையும் குடும்பமும்

தொகு

ஹோப் செப்டம்பர் 24, 1887இல் இசுக்காட்லாந்திலுள்ள லின்லித்கொசையரில் தெற்கு குயீன்ஸ்பெர்ரியில் ஹோப்டூன் மாளிகையில் பிறந்தார். ஜான் ஹோப், முதலாம் லின்லித்கொ பிரபுவிற்கும் ஹெர்சே எவர்லேவிற்கும் முதல் மகனாகப் பிறந்தார்.[1] இவருடைய திருமுழுக்கின்போது விக்டோரியா அரசி வளர்ப்புத் தாயாக விளங்கினார்.[2]

பிரித்தானியாவில் மதிப்புமிக்க ஈட்டன் கல்லூரியில் படித்தார். பெப்ரவரி 29, 1908இல் இரண்டாவது லின்லிதெகொ பிரபுவாக பதவியேற்றார்.

துவக்க பணிவாழ்வு

தொகு

முதலாம் உலகப் போரில் மேற்குப் போர்முனையில் பங்கேற்று கேர்னலாக பதவி பெற்றார். ரோயல் இசுகாட்சு இராணுவப் பிரிவிற்கு தலைமையேற்றார். போருக்குப் பின்னர் 1920களிலும் 1930களிலும் அமைந்த கன்சர்வேட்டிவ் கட்சி அரசுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 1926ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான வேளாண்மை குழுவின் தலைவராக இருந்தார்; இந்த அரசக் குழு 1928இல் தனது அறிக்கையை வெளியிட்டது.[3] இந்த அறிக்கையின் தாக்கத்தால் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவர் இந்தியாவிற்கு வைசிராயாகப் சென்றபோது ஆராய்ச்சிகளில் ஊட்டசத்துக்கு முன்னிடம் தர வேண்டும் என தனிப்பட்ட கவனம் செலுத்தினார்.[4] 1930களில் இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த தேர்வுக் குழுவிற்கு தலைவராகப் பொறுப்பேற்றார்.

இந்தியாவின் வைசிராய்

தொகு

இவரது தந்தை ஆத்திரேலியாவின் முதல் தலைமை ஆளுநராகப் பணியாற்றிய நிலையில்[5] இவருக்கும் ஆத்திரேலியாவில் தலைமை ஆளுநராகப் பணியாற்றிட வழங்கப்பட்ட வாய்ப்பை மறுதளித்தார். அவ்வாறே சென்னையின் ஆளுநராக செல்லவும் மறுத்தார். இருப்பினும் ஏப்ரல் 18, 1936இல் வெலிங்டன் பிரபுவிற்கு அடுத்து இந்தியாவின் வைசிராயாக பதவி ஏற்றார்.[1] லின்லித்கொ 1935இன் இந்திய அரசுச் சட்டத்தின்படி உள்ளாட்சிகளில் தன்னாட்சி நிலவிட வழி வகுத்தார். இந்தத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு பதினோரு மாநிலங்களில் ஐந்தில் வெற்றி பெற்றது.

இரண்டாம் உலகப் போரின் போது காங்கிரசு அரசுகள் பதவி விலகின. அரசுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட மோதலால் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்கள் வலுப்பட்டன. இவற்றை தனது அடக்குமுறையால் சமாளித்த லின்லித்கொ காங்கிரசு தலைவர்களை கைது செய்தார். 1943இன் வங்காளப் பஞ்சத்திற்கு இவரே காரணமாகவும் கருதப் படுகிறார்.[6]

பணி ஓய்வு

தொகு

1943ஆம் ஆண்டில் ஏழரை ஆண்டுகள் வைசிராயாகப் பணி புரிந்த பின்னர் பதவி ஓய்வு பெற்றார். பிரித்தானிய இந்தியாவில் இவரது ஆட்சிக்காலமே மிகுந்த நெடியதாக இருந்தது. பிரித்தானியர்கள் இவரது ஆட்சி சிறப்பாக இருந்ததாகக் கருதினாலும் இந்தியர்கள் இவரது ஆட்சிக் காலத்தில் குறிப்பிடும்படி எதுவும் நடக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

ஓர் உண்மையான சீர்திருத்த கிறித்தவராக 1944,45 ஆண்டுகளில் இசுக்காட்லாந்துத் திருச்சபையின் உயர் ஆணையராகப் பணியாற்றினார்.

1952ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Viceroy at Bay: Lord Linlithgow in India, 1936-43, by John Glendevon
  2. Dictionary of Australian Artists Online
  3. Linlithgow (Chairman); et al. (1928), Royal Commission on Agriculture in India. Volume I, Part II, Calcutta: Government of India, Central Publication Branch, பார்க்கப்பட்ட நாள் 12 August 2010 {{citation}}: Explicit use of et al. in: |author= (help) (Full text at Internet Archive)
  4. Arnold, David (2000), Science, technology, and medicine in Colonial India, The New Cambridge History of India. Part III, Volume 5, Cambridge, UK: Cambridge University Press, p. 201, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56319-4, பார்க்கப்பட்ட நாள் 12 August 2010
  5. Australian Dictionary of Biography
  6. Richard Stevenson, Bengal Tiger and British Lion: An Account of the Bengal Famine of 1943