வெல்லிங்டன் பிரபு

பிரித்தானிய அரசியல்வாதி (1866-1941)

வெல்லிங்டன் பிரபு, (Freeman Freeman-Thomas, 1st Marquess of Willingdon) (12 செப்டம்பர் 1866 – 12 ஆகஸ்டு 1941),பிரித்தானியவின் லிபரல் கட்சியின் அரசியல்வாதியும், நிர்வாகியுமான இவர் பிரித்தானிய இந்தியாவின் 22வது வைஸ்ராயாகவும் மற்றும் கனடாவின் 13வது தலைமை ஆளுநராகவும் பதவி வகித்தவர்.

வெல்லிங்டன் பிரபு
வைஸ்ராய்
பதவியில்
18 மார்ச் 1931 – 18 ஏப்ரல் 1936
ஆட்சியாளர்ஐந்தாம் ஜோர்ஜ்
பின்னவர்விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 செப்டம்பர் 1866
லண்டன்
இறப்பு12 ஆகஸ்டு 1941
லண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துணைவர்மேரி பிரிமென் தாமஸ்
முன்னாள் கல்லூரிஈடன் கல்லூரி

இந்திய மாகாணங்களின் ஆளுநராக தொகு

 
1916ல் போர் மற்றும் பஞ்ச நிவாரணத்திற்காக நன்கொடை வசூலிக்க பம்பாய் மாகாண ஆளுநரின் மனைவி லேடி வெல்லிங்டனால் வெளியிடப்பட்ட அஞ்சல் வில்லை

வெல்லிங்டன் பிரபு முதலில் 17 பிப்ரவரி 1913 முதல் 1917 முடிய பம்பாய் மாகாண ஆளுநராக பதவி ஏற்றார்.[1]

பின்னர் 10 ஏப்ரல் 1919 முதல் 1924 முடிய சென்னை மாகாண ஆளுநராக பதவி வகித்தார். மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில், மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியினர், இந்தியாவின் அனைத்து மாகாணச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. எனவே சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட நீதிக்கட்சியின் வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற்றனர். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் சென்னை மாகாண சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

ஆகஸ்டு 1921ல் மலபார் மாவட்டத்தில் நடந்த இனக் கலவரத்தை வெல்லிங்டன் பிரபு அடக்கினார்.[2] சென்னை பங்கிங்காம் கர்னாடிக் துணி ஆலையின் 10,000 தொழிலாளர்கள் நடத்திய ஆறு மாத பொது வேலை நிறுத்தத்தின் ஆதரவாளர்க்ளுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தை வெல்லிங்டன் பிரபு அடக்கி கட்டுக்குள் கொண்டுவந்தார்.[3][4]

இந்தியத் தலைமை ஆளுநராக தொகு

கனடாவின் தலைமை ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபு, 18 மார்ச் 1931ல் இந்தியத் தலைமை ஆளுநராக பதவி ஏற்றார்.[5] இவர் தலைமை ஆளுநராக பதவி ஏற்ற போது, இந்தியாவில் கடுமையாக பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் பம்பாய் துறைமுகத்திலிருந்து ஆயிரக்கணக்கான டன் தங்கம் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது.

4 சனவரி 1932ல் பிரித்தானிய இந்திய அரசிற்கு எதிராக மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார்.

எனவே வெல்லிங்டன் பிரபு ஒத்துழையாமை இயக்கதிற்கு எதிராக தந்திரமான நடவடிக்கைகளை எடுத்தார்.[6] வெல்லிங்டன் பிரபு மகாத்மா காந்தி போன்ற 80,000 இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் அடைத்தார். மேலும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியையும், அதன் இளைஞர் அமைப்புகளையும் தடை செய்தார். மகாத்மா காந்தி 1933 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.[7][8]

நிறுவிய கட்டமைப்புகள் தொகு

சிந்து ஆற்றின் குறுக்கே 20 மில்லியன் பவுண்டு மதிப்பில் சுக்கர் அணையை கட்டினார்ர்.[9] மேலும் தற்போதைய தில்லி ஜப்தர்ஜங் வானூர்தி நிலையம், பம்பாய் வெல்லிங்டன் விளையாட்டரங்கம் ஆகியவை நிறுவினார்.[10]

இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவி அதன் தலைமைச் சாரணராகச் செயல்பட்டு, இந்தியாவில் சாரண இயக்கத்தை வளர பாடுபட்டவர்.[11]

மேற்கோள்கள் தொகு

  1. "No. 28693". இலண்டன் கசெட். 25 February 1913. p. 1446.
  2. Associated Press (28 August 1921). "Military occupy riot area in India" (PDF). The New York Times. https://query.nytimes.com/mem/archive-free/pdf?res=9C03E2DD143EEE3ABC4051DFBE66838A639EDE. பார்த்த நாள்: 5 April 2009. 
  3. "Ambush British in India" (PDF). The New York Times. 2 September 1921. https://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9407E5DA1439E133A25751C0A96F9C946095D6CF. பார்த்த நாள்: 5 April 2009. 
  4. Mendelsohn, Oliver; Marika Vicziany (1998). The Untouchables: Subordination, Poverty, and the State in Modern India. Cambridge University Press. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-55671-2. https://archive.org/details/nlsiu.305.56.men.13074. 
  5. "No. 33700". இலண்டன் கசெட். 20 March 1931. p. 1877.
  6. John F. Riddick (2006). The History of British India: A Chronology. Greenwood. பக். 110. https://books.google.com/books?id=Es6x4u_g19UC&pg=PA110. 
  7. Brian Roger Tomlinson, The Indian National Congress and the Raj, 1929–1942: the penultimate phase (Springer, 1976).
  8. Rosemary Rees. India 1900-47 (Heineman, 2006), p. 122.
  9. George, Robert E.; Sencourt, Robert (1949). Heirs of Tradition: Tributes of a New Zealander. பக். 66. https://archive.org/details/heirsoftradition0000unse. 
  10. Streat, Raymond, Marguerite Dupree (1987). Lancashire and Whitehall. Manchester University Press ND. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7190-2390-4. https://books.google.com/books?id=BxANAQAAIAAJ. 
  11. J. S. Wilson; Olave Baden-Powell (1959). Scouting Round the World. London: Blandford Press. பக். 91–93. ASIN B0000CKE7M. https://archive.org/details/scoutingroundwor0000unse. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்லிங்டன்_பிரபு&oldid=3858761" இலிருந்து மீள்விக்கப்பட்டது