பெல்லாரி மாவட்டம்
பெல்லாரி மாவட்டம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் பெல்லாரி நகரத்தில் உள்ளது. இது 11 வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. குல்பர்கா கோட்டத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய விஜயநகரம் மாவட்டம் 8 பிப்ரவரி 2021 அன்று நிறுவப்பட்டது.[1][2][3][4]
பெல்லாரி மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பிரிவு | குல்பர்கா கோட்டம் |
தலைநகரம் | பெல்லாரி |
அரசு | |
• துணை ஆணையர் | பவன்குமார் மாலபதி ,இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,450 km2 (3,260 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 14,00,970 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | https://ballari.nic.in/en/ |
மாவட்ட நிர்வாகம்
தொகுபெல்லாரி மாவட்டம் 5 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [5]அவைகள் பின்வருமாறு:
- பெல்லாரி வட்டம்
- காம்பிளி வட்டம்
- குருகோடு வட்டம்
- சிரகுப்பா வட்டம்
- சன்துரு வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
தொகு8,461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெல்லாரி மாவட்டத்தின் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 2,452,595 ஆகும். அதில் 1,236,954 ஆண்கள் மற்றும் 1,215,641 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 983 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 67.43% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 85.77 %, இசுலாமியர் 13.08 % , கிறித்தவர்கள் 0.57 % மற்றும் பிறர் 0.53% ஆக உள்ளனர்.[6]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Karnataka formalises creation of new Vijayanagara district
- ↑ Vijayanagara becomes 31st district of Karnataka State
- ↑ Karnataka gets 31st district; govt issues notification carving Vijayanagara out of Ballari
- ↑ Karnataka Now Has 31 Districts As Yediyurappa Govt Carves Out New District Vijayanagara From Ballari
- ↑ Talukas of Ballari District
- ↑ Bellary District - Population 2011