அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்


அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் அல்லது AcSIR, ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம், சென்னையிலுள்ள தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்திலுள்ளது. இந்த நிறுவனம் முனைவர் பட்டம் (Phd.,) மற்றும் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய பட்டம்(Post Phd.,) வழங்கும் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. [1] 

அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம், சென்னை
வகைதேசிய முக்கிய நிறுவனம்
உருவாக்கம்2010 (2010)
தலைவர்ரகுநாத் அனந்த் மாசேல்கர்
Acting Directorபேரா. குணால் ரே
கல்வி பணியாளர்
2485
மாணவர்கள்3082
அமைவிடம், ,
இணையதளம்www.acsir.res.in

இந்த நிறுவனமானது ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை நிர்வகிக்க ஏற்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும். இதனை இந்திய பாரளுமன்றத்தின் கீழவையான லோக் சபாவில் 2010ஆம் ஆண்டு சட்டம் இயற்றி உருவாக்கினர். அதே சட்டமானது இந்த நிறுவனத்தினை ஒரு "தேசிய முக்கியத்துவமான நிறுவனமாக" அங்கீகரித்தது.

அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் (AcSIR), இந்திய அரசின் தீர்மானத்தினால் ஜூன் 17, 2010 அன்று நிறுவப்பட்டது மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை(சிஎஸ்ஐஆர்)-உடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழிற்துறையில் மேம்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இது அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழக சட்டத்தின் மூலமாக, 2011 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி 2012ஆம் வருடம் அறிவிக்கப்படது.

இது இந்தியாவின் 23 நகரங்களில் பரவியுள்ள 37 ஆய்வகங்கள் மற்றும் சிஎஸ்ஐஆரின் 6 அலகுகளையும் ஆய்வு மையமாக கொண்ட ஒர் உயர் பல்கலைக்கழகமாகும்.

SIRO அங்கீகாரம்

தொகு

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை (DSIR),  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, இந்திய அரசு ஆகியன AcSIR-ஐ ஒரு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பாக (SIRO) அங்கீகரித்துள்ளது.

மேலும் விவரங்கள்

தொகு

இந்த நிறுவனமானது மற்ற கல்வி பல்கலைக்கழகங்களில் வழங்கப்படாத ஆராய்ச்சி வாய்ப்புகளை மாணாக்கர்களுக்கு அளிக்கிறது.

இந்த நிறுவனமானது இதன் கல்வி திட்டங்களில் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களைச் சார்ந்த சுமார் 2200 முழு நேர உறுப்பினர்களை ஆசிரியர்களாகவும், மேலும் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களையும்  மற்றும் 7 கல்விசாரா ஊழியர்களையும் உறுப்பினர்களாக கொண்டுள்ளது.

சான்றுகள்

தொகு