பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் தலைநகரமான சென்னையில் அமைந்த பெருநகர சென்னை மாநகராட்சி 1688-இல் நிறுவப்பட்டது.[1][2][3] பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களும் 200 வார்டுகளையும் கொண்டது.[4]

வரலாறு

தொகு
 
சென்னை மாவட்டத்தின் 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும்

2011-க்கு முன்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும் முன், 174 km2 (67 sq mi) பரப்பளவு கொண்டிருந்தது; சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 km2 (164 sq mi) ஆக இரட்டிப்பு ஆனது.

சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் 7 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 நகராட்சிகளும்; 5 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் 12 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.[5]

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சிகள்

தொகு

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 நகராட்சிகள் விவரம்:ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிகள்

தொகு

சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர்

சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 25 கிராம ஊராட்சிகள்

தொகு

இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், வைக்காடு, மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, மஞ்சம்பாக்கம், கொசப்பூர், நொளம்பூர், நெற்குன்றம்,ராமாபுரம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்-துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மண்சேரி, உத்தண்டி.[5]

விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களுடன், 15 மண்டலங்களும், 200 வார்டுகளையும் கொண்டுள்ளது.[6]பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளிலும், பழைய சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது.[7] செப்டம்பர் 2011-ன் நிலவரப்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், 26 வார்டுகள் பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடி மக்களுக்கும், 58 வார்டுகள மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[7]

மண்டலங்கள்

தொகு
 
பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்குப் பின்னர் உள்ள 15 மண்டலங்கள்
வ.எண். மண்டலம் வார்டுகள் சட்டமன்றத் தொகுதிகள் மக்களவைத் தொகுதி தாலுக்கா மாவட்டம்
1 திருவொற்றியூர் 1–14 திருவொற்றியூர் வட சென்னை திருவொற்றியூர் சென்னை
2 மணலி 15–21 திருவொற்றியூர் /மாதவரம்/பொன்னேரி வட சென்னை/திருவள்ளூர் திருவொற்றியூர்/மாதவரம்/பொன்னேரி சென்னை
3 மாதவரம் 22–33 மாதவரம் திருவள்ளூர் மாதவரம் சென்னை
4 தண்டையார்பேட்டை 34–48 திருவொற்றியூர்/பெரம்பூர்/ஆர். கே. நகர் வட சென்னை தண்டையார்பேட்டை சென்னை
5 இராயபுரம் 49–63 இராயபுரம்/துறைமுகம் வட சென்னை/மத்திய சென்னை எழும்பூர்/புரசைவாக்கம் சென்னை
6 திரு. வி. க. நகர் 64–78 திரு. வி. க. நகர்/பெரம்பூர்/கொளத்தூர்/எழும்பூர் வட சென்னை பெரம்பூர் /அயனாவரம்/புரசைவாக்கம் சென்னை
7 அம்பத்தூர் 79–93 அம்பத்தூர் ஸ்ரீபெரும்புதூர் அம்பத்தூர் சென்னை
8 அண்ணா நகர் 94–108 அண்ணா நகர்/வில்லிவாக்கம்/எழும்பூர் மத்திய சென்னை அயனாவரம்/அமைந்தகரை சென்னை
9 தேனாம்பேட்டை 109–126 ஆயிரம்விளக்கு /தி.நகர்/சேப்பாக்கம் மத்திய சென்னை மயிலாப்பூர் சென்னை
10 கோடம்பாக்கம் 127–142 தி. நகர்/சைதாப்பேட்டை/விருகம்பாக்கம் தென் சென்னை மாம்பலம்/கிண்டி/எழும்பூர் சென்னை
11 வளசரவாக்கம் 143–155 மதுரவாயல்/ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் மதுரவாயல்/ஆலந்தூர் சென்னை
12 ஆலந்தூர் 156–167 ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆலந்தூர் சென்னை
13 அடையாறு 168–180 மயிலாப்பூர்/வேளச்சேரி தென் சென்னை மயிலாப்பூர்/வேளச்சேரி சென்னை
14 பெருங்குடி 181–191 சோழிங்கநல்லூர் தென் சென்னை சோழிங்கநல்லூர் சென்னை
15 சோழிங்கநல்லூர் 192–200 சோழிங்கநல்லூர் தென் சென்னை சோழிங்கநல்லூர் சென்னை

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • "Newly formed zones" (PDF). Chennai Corporation. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Specific
  1. Achuthan, Kamal (23 September 2008). "Chennai Corporation to celebrate 320 years". தி இந்து இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080923115809/http://www.hindu.com/2008/09/23/stories/2008092357680100.htm. பார்த்த நாள்: 31 August 2012. 
  2. Committee, Madras Tercentenary Celebration (1994). The Madras Tercentenary Commemoration Volume. Asian Educational Services. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0537-4. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012.
  3. Aggarwal, Anjana. Comprehensive Reading & Writing in English XII. Firewall Media. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7008-734-2. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012.
  4. பெருநகர சென்னை மாநகராட்சியீன் மண்டலங்களும், வார்டுகளும்
  5. 5.0 5.1 "More areas to come under Chennai Corporation". The Hindu. 30 December 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100102070154/http://www.hindu.com/2009/12/30/stories/2009123057580100.htm. பார்த்த நாள்: 31 August 2012. 
  6. Ramakrishnan, Deepa H (20 September 2011). "Details of merged wards online soon". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article2468466.ece. பார்த்த நாள்: 31 August 2012. 
  7. 7.0 7.1 "சென்னை மாநகராட்சி எல்லைகள் விஸ்தரிப்பு- 200 வார்டுகளுடன் [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யானது". OneIndia.in. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012. {{cite web}}: URL–wikilink conflict (help)

வெளி இணைப்புகள்

தொகு