சூரப்பட்டு
சூரப்பட்டு ("Surapet") அல்லது சூரப்பேடு என்றும் அழைக்கப்படும் புறநகர்ப் பகுதியானது, தமிழ்நாடு மாநிலத்தின் அம்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், வட சென்னை, சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தின் 24-வது வார்டில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் புழல், கிழக்கில் கொளத்தூர், தெற்கில் புத்தகரம், மேற்கில் புழல் ஏரி ஆகியவை அமைந்துள்ளன. இது கிராண்ட் நேஷனல் டிரங்க் சாலை அருகே அமைந்துள்ளது.
சூரப்பட்டு
சூரப்பேடு | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°08′36.4″N 80°11′28.2″E / 13.143444°N 80.191167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
மாநகராட்சி | சென்னை மாநகராட்சி |
மண்டலம் | மாதவரம் மண்டலம், வட சென்னை |
சென்னை மாநகராட்சி மண்டலம் | III |
வார்டு எண் | 24 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சென்னை மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 2.78 km2 (1.07 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,444 |
• அடர்த்தி | 3,800/km2 (9,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600066 |
வாகனப் பதிவு | TN-05 , TN-18 |
மக்கள்வைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மாதவரம் |
அருகமைந்த ஊர்கள் | அம்பத்தூர், புழல், கொளத்தூர், கொரட்டூர் |
இணையதளம் | https://chennaicorporation.gov.in/gcc/ |
அருகமைந்த பெரிய ஊர்கள்
தொகுஇதனருகில் வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் பெரம்பூர் அமைந்துள்ளது.
- ரெட்டேரி தொடருந்து நிலையம் (2 கிமீ)
- கொரட்டூர் தொடருந்து நிலையம் - 5 கிமீ
- புழல் முகாம் (2 கிமீ)
- பாடி (4 கிமீ)
போக்குவரத்து
தொகுஇது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மேற்கே 15 கிமீ தொலைவிலும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.