புழுதிவாக்கம்
புழுதிவாக்கம் (உள்ளகரம்) (ஆங்கிலம்:Puzhithivakkam (Ullagaram)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த சோழிங்கநல்லூர் வட்டத்தை 2018-இல் சென்னை மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டமாக இணைக்கப்பட்டது. இதனால் சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருந்த புழுதிவாக்கம் நகராட்சியையும், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கபட்டது.
புழுதிவாக்கம் (உள்ளகரம்) | |
அமைவிடம் | 12°58′N 80°11′E / 12.97°N 80.19°E |
நாடு | இந்தியா |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | சோழிங்கநல்லூர் |
மக்களவைத் தொகுதி | புழுதிவாக்கம் (உள்ளகரம்) |
மக்கள் தொகை | 53,322 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 13,918 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 53,322 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 95% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 5280 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,872 மற்றும் 112 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.6%, இசுலாமியர்கள் 2.38%, கிறித்தவர்கள் 6.61%, தமிழ்ச் சமணர்கள் 0.12%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[1]
மேலும் பார்க்க
தொகு- புழுதிவாக்கம்(உள்ளகரம்) நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம்