பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 2-ஆவது
பொன்னேரி சட்டமன்றத் தொகுதி (Ponneri Assembly constituency) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 2. திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ள இத்தொகுதி ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
பொன்னேரி | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
மக்களவைத் தொகுதி | திருவள்ளூர் |
தொடக்கம் | 1952 - முதல் |
மொத்த வாக்காளர்கள் | 2,67,345[1] |
இட ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | துரை சந்திரசேகர் |
கட்சி | காங்கிரசு |
கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- பொன்னேரி வட்டம், பூங்குளம், எஞ்சூர், செலியம்பேடு, மாங்கோடு, கீரப்பாக்கம், கள்ளூர், அண்ணாமலைச்சேரி, பெரியவேப்பத்தூர், உப்பு நெல்வயல், அகரம், தேவம்பட்டு, கங்காணிமேடு, உமிபேடு, செகண்யம், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி, இலுப்பாக்கம், கோளூர், சிறுளப்பாக்கம், அவுரிவாக்கம், கனவண்துறை, பாக்கம், திருப்பாலைவனம், பூவாமி, வேம்பேடு, ஆவூர், விடதண்டலம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கோடி, காட்டாவூர், மேதூர், ஆசனம்புதூர், வஞ்சிவாக்கம், பிரளயம்பாக்கம், ஆண்டார்மடம், பழவேற்காடு, தாங்கல்பெரும்பலம், சிறுபழவேற்காடு, கடம்பாக்கம், தத்தமஞ்சி, பெரும்பேடு, சின்னக்காவனம், கூடுவாஞ்சேரி, கனகவல்லிபுரம், திருப்பேர், எலியம்பேடு, லிங்கிபையன்பேட்டை, சோமஞ்சேரி, அதமனன்சேரி, சிறுளப்பன்சேரி, காட்டூர், கருங்காலி, களஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், திருவெள்ளைவாயல், ஏரிப்பள்ளிக்குப்பம், வேளுர், ஆலாடு, குமரசிறுளகுப்பம், கணியம்பாக்கம், கடமஞ்சேரி, தினைப்பாக்கம், மெரட்டூர், தேவதானம், தடப்பெரும்பாக்கம், வைரவன்குப்பம், பெரவள்ளூர், துறைநல்லூர், வடக்குநல்லூர், செவிட்டுபனபாக்கம், போந்தவாக்கம், மாதவரம், மில்லியன்குப்பம், சின்னம்பேடு, கீல்மேனி, தச்சூர், அனுப்பம்பட்டு, வெள்ளம்பாக்கம், தோட்டக்காடு, கல்பாக்கம், நெய்தவாயல், நாலூர், வன்னிப்பாக்கம், ஆமூர், பஞ்செட்டி, ஆதம்பாக்கம், நத்தம், எர்ணாவாக்கம், பாண்டிகவனூர், ஜெகநாதபுரம், நந்தியம்பாக்கம், புழுவேதிவாக்கம், வல்லூர், சீமாபுரம், மடியூர், வழுதிகைமேடு, ஞாயிறு, மாஃபூஸ்கான்பேட்டை, புதுப்பாக்கம், பெரியமுல்லைவாயல், சின்னமுல்லைவாயல், திருநிலை, கோடிப்பள்ளம், அருமந்தை, விச்சூர், வெள்ளிவாயல், இடையன்சாவடி, அரசூர், அப்பளாவரம் மற்றும் ஆண்டவாயல் கிராமங்கள்.
ஆரணி பேருராட்சி, பொன்னேரி நகராட்சி , மீஞ்சூர் பேருராட்சி, அத்திப்பட்டு நகரம்[2].
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | ஒ. செங்கம் பிள்ளை | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | 27,489 | 27.67 | கணபதி ரெட்டியார் | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | 25,626 | 25.79 |
1957 | வி. கோவிந்தசாமி நாயுடு | காங்கிரசு | 32,119 | 25.94 | டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 31,392 | 25.35 |
1962 | டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 26,125 | 48.41 | பி. நாகலிங்கம் | திமுக | 15,721 | 29.13 |
1967 | பி. நாகலிங்கம் | திமுக | 37,746 | 56.61 | டி. பி. ஏழுமலை | காங்கிரசு | 27,751 | 41.62 |
1971 | பி. நாகலிங்கம் | திமுக | 39,783 | 58.39 | டி. பி. ஏழுமலை | நிறுவன காங்கிரசு | 21,650 | 31.77 |
1977 | எஸ். எம். துரைராஜ் | அதிமுக | 31,796 | 42.64 | ஜி. வெற்றிவீரன் | திமுக | 20,524 | 27.53 |
1980 | ஆர். சக்கரபாணி | அதிமுக | 42,408 | 51.07 | பி. நாகலிங்கம் | திமுக | 27,490 | 33.11 |
1984 | சேகர் என்கிற கே. பி. குலசேகரன் | அதிமுக | 61,559 | 59.05 | கே. சுந்தரம் | திமுக | 41,655 | 39.96 |
1989 | கே. சுந்தரம் | திமுக | 51,928 | 44.53 | கே. தமிழரசன் | அதிமுக (ஜெ) | 44,321 | 38.01 |
1991 | இ. இரவிக்குமார் | அதிமுக | 77,374 | 64.74 | கே. பார்த்தசாரதி | திமுக | 36,121 | 30.22 |
1996 | கே. சுந்தரம் | திமுக | 87,547 | 61.72 | ஜி. குணசேகரன் | அதிமுக | 42,156 | 29.72 |
2001 | எ. எசு. கண்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 81,408 | 54.58 | கே. சுந்தரம் | திமுக | 54,018 | 36.22 |
2006 | பா. பலராமன் | அதிமுக | 84,259 | --- | வி. அன்பு வாணன் | திமுக | 73,170 | |
2011 | பொன். ராஜா | அதிமுக | 93,649 | -- | ஏ. மணிமேகலை | திமுக | 62,576 | -- |
2016 | பா. பலராமன் | அதிமுக | 95,979 | -- | டாக்டர் கே. பரிமளம் | திமுக | 76,643 | -- |
2021 | துரை சந்திரசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | 94,528 | 44.94 | ப. பலராமன் | அதிமுக | 84,839 | 40.33[3] |
- 1951இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதாலால் கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியை சேர்ந்த செங்கம் பிள்ளை & கணபதி ரெட்டியார் இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
- 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1977இல் ஜனதாவின் வி. நற்குணன் 14,170 (19.00%) வாக்குகள் பெற்றார்.
- 1989இல் காங்கிரசின் யசோதா 14,410 (12.36%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் அங்கமுத்து 13,508 வாக்குகள் பெற்றார்.
வாக்காளர் எண்ணிக்கை தொகு
2019 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
124849 | 129485 | 63 | 254397 |
வாக்குப் பதிவுகள் தொகு
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | 80.37% | |
2016 | 78.62% | ↓1.75% |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Form 21E (Return of Election)" இம் மூலத்தில் இருந்து 22 Dec 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211222055858/https://www.elections.tn.gov.in/Form21E_TNLA2021/AC002.pdf.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 24 சூன் 2015.
- ↑ "Election Commission of India". https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS222.htm?ac=2.