துரை சந்திரசேகர்
துரை சந்திரசேகர் (Durai. Chandrasekar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் சென்னையினை அடுத்துள்ள மாதவரத்தினை சார்ந்தவர். சந்திரசேகர் சென்னை தியாகராசர் கல்லூரியில் தாவரவியலில் இளம் அறிவியல் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
துரை சந்திரசேகர் | |
---|---|
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | பா. பலராமன் |
தொகுதி | பொன்னேரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | வழக்கறிஞர் |
தேர்தல் செயல்பாடு
தொகு2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் : பொன்னேரி [2]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | துரை சந்திரசேகர் | 94,528 | 45.00% | புதியது | |
அதிமுக | பா. பலராமன் | 84,839 | 40.39% | -8.17 | |
நாம் தமிழர் கட்சி | ஏ.மகேஸ்வரி | 19,027 | 9.06% | +8.24 | |
மக்கள் நீதி மய்யம் | டி.தேசிங்குராஜன் | 5,394 | 2.57% | புதியது | |
அமமுக | பொன். ராஜா | 2,832 | 1.35% | புதியது | |
நோட்டா | நோட்டா | 1,554 | 0.74% | -0.42 | |
பகுஜன் சமாஜ் கட்சி | ஜே.பவானி இளவேனில் | 1,106 | 0.53% | -0.06 | |
வெற்றியின் விளிம்பு | 9,689 | 4.61% | -5.17% | ||
பதிவான வாக்குகள் | 2,10,054 | 78.57% | -0.36% | ||
செல்லாதவை | 203 | 0.10% | |||
மொத்த வாக்காளர்கள் | 2,67,345 | ||||
அதிமுகவிடமிருந்து இந்திய தேசிய காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -3.56% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Durai. Chandrasekar(Indian National Congress(INC)):Constituency- PONNERI (SC)(THIRUVALLUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
- ↑ "ponneri Election Result". Retrieved 20 July 2022.