இராயவரம்

இராயவரம் (Rayavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.

Rayavaram.JPG

"எந்தன் ஊரே இராயவரம்
இனிமை மிக்க சிறுநகரம்
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
மாவட்டத்தை சேர்ந்ததுவே"

- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

அமைப்புதொகு

இராயவரம் (ராயவரம் என்றும் எழுதுவர்) சிற்றூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது செட்டிநாட்டில் உள்ள 96 ஊர்களில் ஓன்று. இங்கு ஏறத்தாழ 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு பெரிதும் விசாயிகளே வாழ்ந்து வருகின்றனர்.ராயபுரம் அருகில் திருமயம், கீழாநிலைக்கோட்டை போன்ற ஊர்கள் உள்ளன. இவ்விரண்டு ஊரிலும் கோட்டைகள் உள்ளன. இன்னும் அக்கோட்டைகள் அழியாமல் இருக்கின்றன. இராயவரம் ஊரானது திருச்சியில் இருந்து 72கிமீ தொலைவிலும் மதுரையில் இருந்து 90 கிமீ தூரமும் உள்ளது. தேசிய நெடுச்சாலை 210(NH 210)8 கிமீ தொலைவில் இருக்கிறது. அருகாமையில் உள்ள புகைவண்டி நிலையம் திருமயத்திலும், விமான நிலையம் திருச்சியிலும் உள்ளது. தரை வழியே புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, அரிமலம் மற்றும் திருமயத்துடன் நன்கு இணைக்கபட்டு தினம் 75 பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து சொல்கின்றன. இராயவரத்தை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் முத்தரையர் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

கோவில்கள்தொகு

1. குடைவரை கோவில் சிவன் கோட்டையூர் ராயவரம் https://goo.gl/maps/6Sj7YzBm3UFXuvrc6

2. ஸ்ரீ மலைக்கொழுந்திஸ்வரர் குடவரை சிவன் கோயில் https://goo.gl/maps/VCgzxtcHoTM5Bb346

3. ஸ்ரீ இத்திமரத்து பிள்ளையார் கோவில் https://goo.gl/maps/EZfPbGdcK1Nttrf49

4. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் https://goo.gl/maps/dATPWQYu8GivWLc6A

5. ஸ்ரீ பெருமாள் கோவில் https://goo.gl/maps/eFx6L1R9CXfgHj1U8

6. ஸ்ரீ சிவன் கோவில். https://goo.gl/maps/zBqDP8zhtcVevmhR6

7. ஸ்ரீ ஆஞ்சேநேயர் கோவில் https://goo.gl/maps/TX5Hj4SD4kB4x4cF7

8. ஸ்ரீ அய்யனார் கோயில் https://goo.gl/maps/wQiHkkJfQoJumFzXA

நீர்நிலைகள்தொகு

1. பழைய ஊரணி

2. சிவன் கோவில் ஊரணி

3. புது ஊரணி

4. நாராயணன் செட்டியார் ஊரணி

5. நல்லான் செட்டியார் ஊரணி

6. பொன்னாச்சி ஊரணி

7. ஆண்டி ஊரணி

8. உலகங்காத்தான் ஊரணி

9. வாடி ஊரணி

கண்மாய்கள்தொகு

1. ராயவரம் கண்மாய்

2. கொத்தத்தி கண்மாய்

3.குறுந்தங்குடி கண்மாய்

4.ஆயிங்குடி கண்மாய்

5.செங்கீரை கண்மாய்

6. செட்டி கண்மாய்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராயவரம்&oldid=3003314" இருந்து மீள்விக்கப்பட்டது