பார்பாரா இலிசுகோவ்
பார்பாரா இலிசுகோவ் (Barbara Liskov, பிறப்பு: நவம்பர் 7, 1939) அல்லது (பார்பாரா ஜேன் கூபர்மன் (Barbara Jane Huberman)) ஓர் அமெரிக்கக் கணினி அறிவியலாளர் ஆவார்.[2] இவர் மசாசூசட் நிறுவனப் பேராசிரிய பட்டியலில் உள்ளார். மேலும், இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனப் பொறியியல் பள்ளியின் மின்பொறியியல், கணினி அற்வியல் துறைசார் போர்டு பேராசிரியரும் ஆவார்.[3]
பார்பாரா இலிசுகோவ் Barbara Liskov | |
---|---|
2010 இல் இலிசுகோவ். | |
பிறப்பு | பார்பாரா ஜேன் கூபர்மன் நவம்பர் 7, 1939 கலிபோர்னியா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கணினியியல் |
பணியிடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | சதுரங்கம் முடிப்பு விளையாட்டுக்கான நிரல் (1968) |
ஆய்வு நெறியாளர் | ஜான் மெக்கார்த்தி[1] |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
வாழ்க்கையும் பணியும்
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகுஇவர் தேசியப் பொறியியல் கல்விக்கழகம், தேசிய அறிவியல் கல்விக்கழகம், ஆக்கியவற்றின் உறுப்பினரும் அமெரிக்க்க் கலை, அறிவியல் கல்விக்கழகம், கணிப்பெந்திரக் கழகம் ஆகியவற்றின் ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் 2002 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் மிகச் சிறந்த பெண் புல உறுப்பினராக்க் கருதப்பட்டார். மேலும். அமெரிக்க அறிவியலாளர்களில் மிகச் சிறந்த 50 பேரில் ஒருவராக்க் கருதப்பட்டார்.[4]
இவர் 2004 இல் "நிரலாக்க மொழி, நிரலாக்க முறையியல், பரவல்நிலை அமைப்புகள்" ஆகியவற்றுக்கான பங்களிப்புகளுக்காக ஜான் வான் நியூமன் பதக்கத்தைப் பெற்றார்.[5] 2005 நவம்பர் 19 இல் இவரும் டொனால்டு ஈ. நூத்தும் ETH தகைமை முனைவர்கள் பட்டம் வழங்கப்பட்டனர்.[6] இவரும் நூத்தும் ETH சூரிச் தகைமை கருத்துரைத் தொடரில் தோன்றியுள்ளனர்.[7]
இவர் 2008 ஆம் ஆண்டுக்கான டர்னிங் விருதை அமெரிக்கக் கணிப்பெந்திரக் கழகத்தில் இருந்து 2009 மார்ச்சில் பெற்றார்.[8] இது நிரலாக்க மொழி வடிவமைப்பு, பொருள்-சார் நிரலாக்கமுறை உருவாக்கத்துக்கு வழிவகுத்த மென்பொருளாக்க முறையியல் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டது.[9] குறிப்பாக இவர் இரண்டு நிரலாக்க மொழிகளை உருவாகினார். அவை CLU நிரலாக்க மொழி (1970 களில்),[10] ஆர்கசு நிரலாக்க மொழி[11] (1980 களில்) என்பனவாகும்.[9] அமெரிக்க கணிப்பெந்திரக் கழகம் The ACM cited her contributions to the practical and theoretical foundations of "நிரலாக்கமொழி, அமைப்பு வடிவமைப்பு ஆகியவற்றுக்கு நடைமுறை, கோட்பாட்டு அடிப்படைகளுக்கான பங்களிப்புகளை விதந்து கூறுகிறது. குறிப்பாக, தரவுகள் மீட்புச் சுருக்கம், பிழைப்பொறுதி, பரவியநிலைக் கணிப்பு ஆகியவற்றுக்கான பங்களிப்புகளைச் சிறப்பாக விதந்தோதுகிறது."[12]
இவர் மூன்று நூல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கணித மரபியல் திட்டத்தில் பார்பாரா இலிசுகோவ்
- ↑ Barbara Liskov - A.M. Turing Award Winner
- ↑ Barbara Liskov, Programming Methodology Group, MIT.
- ↑ "MIT's magnificent seven: Women faculty members cited as top scientists". MIT News Office (Cambridge, MA). 5 Nov 2002 இம் மூலத்தில் இருந்து 9 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109221808/http://web.mit.edu/newsoffice/2002/women.html. பார்த்த நாள்: 29 October 2012.
- ↑ IEEE John von Neumann Medal Recipients from the website of ஐஇஇஇ
- ↑ "Honorary Doctors". Zurich: ETH Computer Science. 22 Mar 2006. Archived from the original on 8 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
Barbara Liskov and Donald E. Knuth were awarded the title ETH Honorary Doctor on 19 November 2005.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Distinguished Lecturers Barbara Liskov and Donald E. Knuth". Zurich: ETH Computer Science. Jan 2006. Archived from the original on 8 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Top prize in computing goes to MIT professor from the website of The Boston Globe
- ↑ 9.0 9.1 Barbara Liskov Wins Turing Award | March 10, 2009 from the Dr. Dobb's Journal website
- ↑ Barbara Liskov; Snyder, A.; Atkinson, R.; Schaffert, C. (August 1977). "Abstraction mechanisms in CLU". Comm. ACM 20 (8): 564–576. doi:10.1145/359763.359789. வார்ப்புரு:Citeseerx.
- ↑ Barbara Liskov (March 1988). "Distributed programming in Argus". Comm. ACM 31 (3): 300–312. doi:10.1145/42392.42399.
- ↑ "ACM Names Barbara Liskov Recipient of the 2008 ACM A.M. Turing Award". Association for Computing Machinery. Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2009-03-10.
வெளி இணைப்புகள்
தொகு- Prof. Liskov's home page
- Programming Methodology Group
- Turing Award press release
- Tom Van Vleck, Barbara Liskov, A.M. Turing Award Winner
- National Public Radio "Science Friday" interview with Barbara Liskov, originally aired on 13 Mar 2009 பரணிடப்பட்டது 2009-04-01 at the வந்தவழி இயந்திரம்
- Celebrating Women of Distinction, Barbara Liskov, Turing Award interview by, Stephen Ibaraki
- "Barbara Liskov: An Interview Conducted by William Aspray, IEEE History Center, August 6, 1991". GHN: IEEE Global History Network. பார்க்கப்பட்ட நாள் 2013-11-29.
- John V. Guttag, Barbara Liskov, The Electron and The Bit: EECS at MIT, 1902-2002, Chapter VII: "Pioneering Women in EECS", pp. 225–239, 2003, Department of Electrical Engineering and Computer Science, MIT
- Barbara Liskov named Institute Professor, MIT News, July 1, 2008
- Department News: Barbara Liskov named Institute Professor பரணிடப்பட்டது 2016-11-05 at the வந்தவழி இயந்திரம், EECS Newsletter, Fall 2008
- Natasha Plotkin, Barbara Liskov named Institute Professor, The Tech (MIT), 128,29, July 9, 2008
- Robert Weisman, Top prize in computing goes to MIT professor, The Boston Globe, March 10, 2009
- Erica Naone, Driven to Abstraction, MIT Technology Review, December 21, 2009
- Barbara Liskov பரணிடப்பட்டது 2018-07-12 at the வந்தவழி இயந்திரம் at the Chess programming wiki