மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம் (Institute of Electrical and Electronics Engineers), சுருக்கமாகத் தமிழில் மிமிபொக (அல்லது ஐஇஇஇ, IEEE) என்பது ஓர் இலாபநோக்கற்ற தொழிசார் குமுக நிறுவனம். இதன் தலைமையிடம் அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்தில் உள்ளது.[2] . இது மின்னியல் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்த உலகளாவிய ஓர் அமைப்பு. இது தற்பொழுது 160க்கு மேலான நாடுகளில் இருந்து, 400,000 உறுப்பினர்களுக்கும் மேலானவர்கள் பங்கு கொள்ளும் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது; இதில் 45% உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள்[3][4]

ஐஇஇஇ
(IEEE)
IEEE logo svg.png
வகைதொழில்சார் நிறுவனம்
நிறுவப்பட்டதுசனவரி 1, 1963
தலைமையகம்நியூ யார்க் நகரம்
தோற்றம்அமெரிக்க மின்னியல் பொறியாளர்கள் கழகமும், வானொலிப் பொறியாளர்கள் கழகமும் இணைந்து உருவானது.
வேலைசெய்வோர்மோசே காம் (Moshe Kam), தற்போதைய தலைவர்
சேவை புரியும் பகுதிஉலகம் தழுவியது
Focusமின்னியல், மின்னணுவியல், தொலைதொடர்பியல், கணினிப் பொறியியல், கணினி அறிவியல், தகவல்நுட்பவியல்[1]
வழிமுறைதொழிலக சீர்தரங்கள், கருத்தரங்குகள், வெளியீடுகள்
வருமானம்US$330 மில்லியன்
உறுப்பினர்400,000+
இணையத்தளம்http://www.ieee.org

வரலாறுதொகு

 
நியூ யார்க் நகரத்தின் 3 ஆவது பார்க் அவென்யூவில் உள்ள 17 ஆவது மாடியில் உள்ள ஐஇஇஇ நிறுவன அலுவலகம்.

ஐஇஇஇ நிறுவனம், அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பெற்றுள்ள ஒன்று.[2] 1912 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற வானொலிப் பொறியாளர்கள் கழகமும் (Institute of Radio Engineers, IRE)), 1884 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற அமெரிக்க மின்னியல் பொறியாளர் கழகமும் (American Institute of Electrical Engineers, AIEE) ஒன்றிணைந்து, 1963 ஆம் ஆண்டு ஐஇஇஇ என்னும் புதிய மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் (மிமிபொக) உருவானது

அமெரிக்க மின்னியல் பொறியாளர் கழகத்தின் ஆர்வங்கள் கம்பிவழி தகவல் அனுப்பும் தொலைகம்பியியல் அல்லது "தந்தியியல்" (telegraphy), தொலைபேசியியல் (telephony), மின்னாற்றல் உருவாக்கம், வழங்கல் ஆகியவையாக இருந்தன. வானொலிப் பொறியாளர் கழகம் (இன்சிட்டியூட் ஆம் ரேடியோ எஞ்சினீயர்சு) பெரும்பாலும் மின்காந்த அலைகளாகிய வானொலி அலைகள் (ரேடியோ அலைகள்) சார்ந்த பொறியியல் பற்றியதாக இருந்தது. இந்த நிறுவனமுமே இரு வேறு நிறுவனங்களில் ஒன்றிணைப்பால் உருவானது. கம்பியில்லா தொழிற்கலைக் கழகம் (Wireless Institute) என்பதும் தொலைக்கம்பி, கம்பியில்லா பொறியியியலாளர்கள் குமுகம் (Society of Wireless and Telegraph Engineers) என்னும் நிறுவனம் ஆகிய இரண்டு சிறு நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் உருவானது வானொலிப் பொறியாளர் கழகம். 1930களில் எலக்ட்ரானிக்ஃசு (electronics) என்று அழைக்கப்பெற்ற மின்னணுவியல் பொறியாளர்கள் இந்த வானொலிப் பொறியாளர் கழகத்தில் பொதுவாகச் சேர்ந்தனர். அக்காலத்தில் மின்னணுவியல் என்பது கண்ணாடிக் குமிழி அல்லது குழாய்க்குள் எதிர்மின்னிகளைக் (electrons) கட்டுப்படுத்தும் எதிர்மின்னிக் கருவிகள் மிகவும் பரவி வந்தன. வானொலிப் பொறியியல், மின்னியல் பொறியியல் துறைகளின் வேறுபாடுகள் குறைந்து மயங்கி வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரண்டு நிறுவனங்களிடையே போட்டியும் பெருகி வந்தன. ஆனால் 1961 ஆம் ஆண்டில் இரண்டு நிறுவனங்களின் தலைவர்களும் ஒன்றுகலந்து பேசி சனவரி 1, 1963 இல் புதிய ஐஇஇஇ (மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம், மிமிபொக) என்னும் நிறுவனத்தை உருவாக்கினர்.

மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் எலிஃகு தாம்சன் (Elihu Thomson, AIEE, 1889–1890), அலெக்ஃசாண்டர் கிராம் பெல் (Alexander Graham Bell, AIEE, 1891–1892), சார்லசு புரோட்டியசு இசுட்டைன்மெட்ஃசு (Charles Proteus Steinmetz, AIEE, 1901–1902), இலீ டி ஃபாரெசுட்டு (Lee De Forest, IRE, 1930), பெடரிக் டெர்மன் (Frederick E. Terman, IRE, 1941), வில்லியம் இரெட்டிங்க்டன் ஃகியூலெட் (William Reddington Hewlett, IRE, 1954), எர்ணெசுட்டு வீபர் (Ernst Weber, IRE, 1959; IEEE, 1963), இவான் கெட்டிங் (Ivan Getting, IEEE, 1978).

மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் அமைப்புச் சட்டம் அதன் குறிக்கோள்களாக, "மின்னியல், மின்னணுவியல், தொலைதொடர்பியல், கணினி சார்ந்த பொறியியல் கொள்கைகளையும் நடைமுறை வழக்குகளையும், அது தொடர்பான பொறியியல் கிளைத்துறைகளையும் கலை, அறிவியல் துறைகளையும் முன்னேற்றி வளர்க்கும் அறிவியல், கல்வி சார்ந்தது" என்று வரையறையிடுகின்றது "[1] இக்குறிகோள்களை நிறைவேற்றும் முகமாக மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனம் ஒரு பெரும் அறிவியல் ஆய்விதழ்கள் வெளியீட்டகமாகவும், கல்விசார் கருத்தரங்கங்கள், பட்டறைகள், மாநாடுகள் நடத்தும் நிறுவனமாகவும் உள்ளது. சீர்தரம் நிறுவும் பணிகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது. 900-க்கும் அதிகமான பலதுறையைச் சார்ந்த தொழிலக சீர்தரங்களை நிறுவியுள்ளது. இவை மின்னாற்றல், உடல்நலம்சார் உயிர் அறிவியல், தொலைதொடர்பியல், தகவல் தொழில்நுட்பம், வானூர்திய-விண்ணியல் துறைகள், நுகர்வோர் மின்னணுவியல், போக்குவரத்து, நானோதொழில்நுட்பம் என மிகப்பல துறைகளைச் சார்ந்தவை. மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனம் உயர்கல்விக்கழங்களுடன் ஒன்றிணைந்து கல்விசார் நடவடிக்கைகளிலும் பங்கு கொள்கின்றது. மிமிபொக (ஐஇஇஇ) நிறுவனத்தின் சின்னம் (logo) பெஞ்சமின் பிராங்கிளினின் (காற்றாடிப்) பட்டத்துள் (kite) வலக்கை பிடிவிதியைக் காட்டும் ஒரு சாய்சதுரம். இது 1963 இல் உருவாக்கியது [5].

ஐஇஇஇ தன்னுறுப்புகளாக 38 தொழில்நுட்பக் குழுமங்களைக் கொண்டுள்ளது. இவை பல கருத்தரங்கங்களை குறிப்பிட்ட பருவந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்தொகு

  1. 1.0 1.1 "IEEE Technical Activities Board Operations Manual" (PDF). IEEE. 2011-09-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. திசம்பர் 7, 2010 (2010-12-07) அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி), section 1.3 Technical activities objectives
  2. 2.0 2.1 "IEEE Technical Activities Board Operations Manual" (PDF). IEEE. 2011-09-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. நவம்பர் 10, 2010 (2010-11-10) அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி), section 1.1 IEEE Incorporation
  3. "IEEE at a Glance > IEEE Quick Facts". IEEE. திசம்பர் 31, 2010 (2010-12-31). மார்ச்சு 7, 2011 (2011-03-07) அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  4. "IEEE 2009 Annual Report" (PDF). IEEE. அக்டோபர் 2010 (2010-10). 2011-07-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. நவம்பர் 11, 2010 (2010-11-11) அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  5. "IEEE – Master Brand and Logos". www.ieee.org. 2011-01-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஇஇஇ&oldid=3684642" இருந்து மீள்விக்கப்பட்டது