எலினோர் ரூசுவெல்ட்

அன்னா எலினோர் ரூசுவெல்ட் Anna Eleanor Roosevelt (ஒலிப்பு: /ˈɛlɨnɔr ˈroʊzəvɛlt/; அக்டோபர் 11, 1884 – நவம்பர் 7, 1962) 1933ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணியாக (ஆட்சியிலுள்ள குடியரசுத் தலைவரின் மனைவியாக) இருந்தவர்.தனது கணவர் [[பிராங்கிளின் ரோசவெல்ட்|பிராங்க்ளின் ரூசுவெல்ட்டின் "புதிய நடவடிக்கைகளை" ஆதரித்து அமெரிக்க குடியியல் உரிமைகளுக்காகப் போராடியவர்.1945ஆம் ஆண்டில் அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகும் பன்னாட்டு அரசியலில் ஆர்வமுள்ளவராகவும் புதிய நடவடிக்கைகள் கூட்டணி ஆர்வலராகவும் இருந்து வந்தார். பல நூல்களை இக்காலத்தில் எழுதியுள்ளார்.வேலையிலுள்ளப் பெண்களின் நிலையை உயர்த்துவதில் பெரும் பங்காற்றினார். இருப்பினும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அவர் கருதிய சம உரிமைச் சட்டத்தை எதிர்த்தார்.

அன்னா எலினோர் ரூசுவெல்ட்
Anna Eleanor Roosevelt.png
வெள்ளை மாளிகை ஓவியம்
ஐக்கிய அமெரிக்காவின் ஐ.நா.பொதுப்பேரவை பேராளர்
பதவியில்
திசம்பர் 31, 1946 – திசம்பர் 31, 1952
குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் அவைத்தலைவரும்
பதவியில்
1946–52
முன்னவர் புதிய பதவி
பின்வந்தவர் சார்லசு மாலிக்
தலைவர்,பெண்கள் நிலை குறித்த குடியரசுத் தலைவரின் ஆணையம்
பதவியில்
1961–62
குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி
முன்னவர் இல்லை
பின்வந்தவர் எஸ்தர் பீடர்சன்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணி
பதவியில்
மார்ச்சு 4, 1933 – ஏப்ரல் 12, 1945
குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட்
முன்னவர் லூ ஹென்றி ஹூவர்
பின்வந்தவர் எலிசபெத் "பெஸ்" வாலஸ் ட்ரூமன்
நியூயார்க் நகர முதல்பெண்மணி
பதவியில்
சனவரி 1, 1929 – திசம்பர் 31, 1932
முன்னவர் காதரின் ஏ. டன்
பின்வந்தவர் எடித் லூயி அல்ட்சுல்
தனிநபர் தகவல்
பிறப்பு அன்னா எலினோர் ரூசுவெல்ட்
அக்டோபர் 11, 1884(1884-10-11)
நியூயார்க், நியூ யார்க்
ஐக்கிய அமெரிக்கா
இறப்பு நவம்பர் 7, 1962(1962-11-07) (அகவை 78)
நியூயார்க், நியூ யார்க்
ஐக்கிய அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
காசநோய்[1]
அடக்க இடம் ஐட் பார்க், நியூயார்க்
அரசியல் கட்சி மக்களாட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிராங்க்ளின் டி. ரூசுவெல்ட்
பிள்ளைகள் அன்னா ரூசுவெல்ட் ஹல்ஸ்டெட், ஜேம்சு ரூசுவெல்ட், எலியட் ரூசுவெல்ட், பிராங்க்ளின் டெலனோ ரூசுவெல்ட் ஜூர்,ஜான் அஸ்பின்வால் ரூசுவெல்ட்
பணி முதல் பெண்மணி, பேராளர், தன்னார்வலர்
சமயம் எபிஸ்கோபல்
கையொப்பம்

1940களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக பெரிதும் துணை புரிந்தார். 1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஐ.நா உருவாக கருத்துருவாக்கத்திற்கு வழி செய்தார்.குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அவரை 1945 முதல் 1952வரை ஐ.நா வின் அமெரிக்கத் தூதராக நியமித்தார்.அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா வரைவுகளை மேற்பார்வையிட்ட குழுவின் தலைவராக இருந்து அவற்றைச் செம்மைப்படுத்த பெரும் பங்காற்றினார்.மனித உரிமைகள் குறித்த அவரது சாதனைகளைப் பாராட்டி ட்ரூமன் அவரை "உலகின் முதல் பெண்மணி" என்று பாராட்டினார்.[2]

1962ஆம் ஆண்டு எலும்பு மச்சை காசநோயால் தமது 78வது அகவையில் மரணமடைந்தார்.அமெரிக்காவின் மிகவும் வியக்கப்பட்டப் பெண்மணியாக விளங்கினார்.[2][3][4]

இளமைக் கால வாழ்க்கைதொகு

அன்னா எலினோர் ரூசுவெல்ட் எலியட்டு ரூசுவெல்டுக்கும் அன்னா ரிபெக்கா ஆலுக்கும் பிறந்தவர்.[5] சிறு வயது முதலேயே இவர் எலினோர் என்னும் நடுப்பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் வயதானவர் போலேயே அடிக்கடி நடித்துக்கொண்டிருந்ததால் இவரின் தாய் எலினோரை பாட்டி (Granny) என்றே அழைத்து வந்தார்.[6]

எலீனோர் செல்வாக்கான குடும்பத்திலேயே பிறந்தார். இவரின் குடும்பம் நியூ யார்க் நகரில் சுவெல் என்ற பெயரில் அதிகம் அறியப்பட்டது. இவருக்கு இரண்டு இளைய சகோதரர்களும் உண்டு.[4] இவர் அதிபர் தியோடர் ரூசுவெட்டின் சகோதரர் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.[7] இவரின் பெற்றோர் இவரின் இளவயதிலேயே மரணமுற்றனர். இதனால் இவரின் பாட்டி வீட்டில் இவர் அடைக்கலம் ஆனார். அங்கே இவரின் தனிமை இவரை அழகற்றவர் என்ற தாழ்வு மனப்பாண்மைக்குள் தள்ளியது. இவர் தான் அழகற்றவர் என்று நினைப்பதை தன் எழுத்துக்களின் மூலமும் வெளிப்படுத்தி உள்ளார்.[8] இவரின் பதினைந்தாவது வயதில் இவரது தந்தையின் சகோதரி மூலம் இங்கிலாந்து நாட்டின் ஆலன்சுவுட்டில் பள்ளிக் கல்வியை முடித்தார்.[9] அப்பள்ளியின் ஆசிரியரான மேரி இவரிடம் பெண்ணியவாதக் கொள்கைகளை கற்பிதத்துடன் பெண்களின் சுய அறிவுத் திறனை வளர்ப்பதை பற்றியும் கற்பித்தார். இது இவரின் தன்னம்பிக்கையை வளர்த்தது.[10]

மேற்கோள்கள்தொகு

  1. "Eleanor Roosevelt NNDB Profile". NNDB. 2007-05-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "First Lady of the World: Eleanor Roosevelt at Val-Kill". National Park Service. 2008-05-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mother Teresa Voted by American People as Most Admired Person of the Century". Gallup's List of Widely Admired People. 1999-12-31. 2008-05-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Lash, Joseph P. (1971). Eleanor and Franklin. W.W. Norton & Company. பக். 48, 56, 57, 74, 81, 89–91, 108–10, 111–3, 145, 152–5, 160, 162–3, 174–5, 179, 193–6, 198, 220–1, 225–7, 244–5, 259, 273–6, 297, 293–4, 302–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56852-075-1. https://archive.org/details/eleanorfranklins0000lash. 
  5. "Eleanor Roosevelt Biography". National First Ladies' Library. Firstladies.org. நவம்பர் 21, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 13, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. Sicherman, Barbara; Green, Carol Hurd (1980). Notable American Women: The Modern Period. Harvard University Press. பக். 595. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-62733-8. http://books.google.com/books?id=CfGHM9KU7aEC&pg=PA595&dq=%22Eleanor+roosevelt%22+%22Granny%22&hl=en&sa=X&ei=xhStUL7gGaStygHB84HYBw&ved=0CD8Q6AEwBg#v=onepage&q=%22Eleanor%20roosevelt%22%20%22Granny%22&f=false. பார்த்த நாள்: November 21, 2012. 
  7. Davis, Kenneth C. (2012). Don't Know Much About the American Presidents. Hyperion. http://books.google.com/books?id=0BjfOqD-tXAC&pg=PT614&dq=%22Eleanor+Roosevelt%22+%22middle+name%22&hl=en&sa=X&ei=CROtUN6qPIKiyAHW4oHACw&ved=0CDMQ6AEwAQ. பார்த்த நாள்: November 21, 2012. 
  8. Black, Allida (2009). "Anna Eleanor Roosevelt". Whitehouse.gov. நவம்பர் 23, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 13, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  9. Wiesen Cook, Blanche (1992). Eleanor Roosevelt: 1884–1933. Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-670-80486-3. https://archive.org/details/eleanorroosevelt02cook. பார்த்த நாள்: October 24, 2012. 
  10. "Marie Souvestre (1830–1905)". The Eleanor Roosevelt Papers Project at George Washington University. நவம்பர் 24, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 24, 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினோர்_ரூசுவெல்ட்&oldid=3581456" இருந்து மீள்விக்கப்பட்டது