ஜீவராஜ் மேத்தா
ஜீவராஜ் மேத்தா குசராத்து மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர் ஆவார்.
ஜீவராஜ் மேத்தா | |
---|---|
![]() | |
1947-இல் ஜீவராஜ் மேத்தா | |
1st [[குஜராத் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சர்]] | |
பதவியில் 1 மே 1960 – 18 செப்டம்பர் 1963 | |
முன்னவர் | Position established |
பின்வந்தவர் | பல்வந்தராய் மேத்தா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 29 ஆகஸ்டு 1887 அம்ரேலி, பம்பாய் மாகாணம் |
இறப்பு | 7 நவம்பர் 1978 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஹன்ச ஜீவராஜ் மேத்தா |
சமயம் | இந்து சமயம் |
அரசியல் தொகு
மகாத்மா காந்தியின் தனி மருத்துவராக இருந்த ஜீவராஜ் மேத்தா, இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.[1]
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பரோடா சமஸ்தானத்தின் பிரதம அமைச்சராக 4 செப்டம்பர் 1948 முதல் பணிபுரிந்தவர்.[2]பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாண அரசில் பொதுப்பணித் துறை, நிதி, தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.
புதிதாக உருவாக்கப்பட்ட குசராத்து மாநிலத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, முதலாவது முதலமைச்சராக ஏப்ரல் 1960 முதல் செப்டம்பர் 1963 முடிய செயல்பட்டவர். பின்னர் 1963 முதல் 1966 முடிய பிரிட்ட்டனுக்கான இந்தியத் தூதுவராக பதவி வகித்தார். மேலும் 4ஆவது மற்றும் 5ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவர்.
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "A Pioneer in India" இம் மூலத்தில் இருந்து 2011-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110614145337/http://www.qmul.ac.uk/alumni/publications/blc/blc_spring06.pdf.
- ↑ "Gaekwar Inaugurates Responsible Government". Indian Express. 5 September 1948. https://news.google.com/newspapers?id=xdI-AAAAIBAJ&sjid=k0wMAAAAIBAJ&pg=3890,6471046&dq=baroda-state&hl=en.
- A tribute to the indomitable spirit of Jivraj Mehta
- Dr. SHRI JIVRAJ NARAYAN MEHTA (First Chief Minister 0f Gujarat) பரணிடப்பட்டது 2015-06-07 at the வந்தவழி இயந்திரம்
- http://www.business-standard.com/article/government-press-release/jp-nadda-and-dr-jitendra-singh-release-api-textbook-of-medicine-115020401132_1.html
- http://www.gujaratinformation.net/gallery/Chief_Minister/Jivrajbhai.htm பரணிடப்பட்டது 2010-10-12 at the வந்தவழி இயந்திரம்
- http://www.mapsofindia.com/gujarat/government-and-politics/ பரணிடப்பட்டது 2009-06-25 at the வந்தவழி இயந்திரம்