ஜோ பிரேசியர்

ஜோசஃப் வில்லியம் ஜோ பிரேசியர் (Joseph William "Joe" Frazier, சனவரி 12, 1944 – நவம்பர் 7, 2011), பரவலாக ஸ்மோகிங் ஜோ, ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரரும் உலக மிகு எடை குத்துச்சண்டையில் தன்னிகரில்லா சாதனையாளரும் ஆவார். 1965ஆம் ஆண்டு முதல் 1976 வரை போட்டிகளில் பங்கேற்ற பிரேசியர் 1981ஆம் ஆண்டில் ஒரேஒரு மீள்வருகைப் போட்டியில் பங்கேற்றார்.

இசுமோகிங் ஜோ ஃபிரேசியர்
Smokin' Joe Frazier
2011இல் பிரேசியருக்கு (நடுவில்) டெய்லி நியூஸ் நாளிதழின் முதல்பக்க விருது வழங்கப்படல்
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்ஜோசஃப் வில்லியம் பிரேசியர்
செல்லப்பெயர்"ஸ்மோகிங்' ஜோ"
பிரிவுமிகுஎடை
உயரம்5 அடி 11+12 அங் (1.82 m)
நீட்ட தூரம்73 அங் (185 cm)
தேசியம்அமெரிக்கர்
பிறப்பு(1944-01-12)சனவரி 12, 1944
பிறந்த இடம்பியுஃபோர்ட், தென் கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 7, 2011(2011-11-07) (அகவை 67)[1]
இறப்பு இடம்பிலடெல்ஃபியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
நிலைமரபுவழா நிலை
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்37
வெற்றிகள்32
வீழ்த்தல் வெற்றிகள்27
தோல்விகள்4
சமநிலைகள்1
போட்டி நடக்காதவை0

1960களில் குத்துச்சண்டையில் முதலிடங்களுக்குப் போட்டியிட்ட பிரேசியர் ஜெர்ரி குவாரி, ஆசுகார் போனெவெனா, பஸ்டர் மாதிஸ், எட்டி மாகென், டக் ஜோன்ஸ், ஜியார்ஜ் சுவலோ மற்றும் ஜிம்மி எல்லிஸ் போன்றவர்களை வென்று 1970களின் தன்னிகரற்ற மிகுஎடை சாதனையாளராகத் திகழ்ந்தார். 1971ஆம் ஆண்டில் நூற்றாண்டின் சண்டை எனப்பட்ட மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய குத்துச்சண்டையில் புள்ளிக்கணக்கில் முகம்மது அலியை வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜியார்ஜ் ஃபோர்மனிடம் நேரடியாகத் தோற்று தனது உலக வாகையாளர் பட்டத்தை இழந்தார். இருப்பினும் ஜோ பக்னர், குவாரி , எல்லிஸ் ஆகியோருடனான சண்டைகளில் வென்று வந்தார். 1974ஆம் ஆண்டு அலியுடன் நடந்த இரண்டாவது மீள்போட்டியில் தோற்றார்.

பிரேசியரின் கடைசி உலகப் பட்டச் சண்டையில் 1975ஆம் ஆண்டு முகம்மது அலியுடனான மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்தார். மீண்டும் ஃபோர்மனிடம் 1976ஆம் ஆண்டில் இரண்டாம் முறை தோல்வியுற்ற பின்னர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 1981ஆம் ஆண்டில் மீளவருகை செய்து ஒரேஒருமுறை போட்டியிட்டுப் பின்னர் நிரந்தரமாக ஓய்வு பெற்றார். பன்னாட்டு குத்துச்சண்டை ஆராய்ச்சி நிறுவனம் (IBRO) பிரேசியரை அனைத்துக் காலங்களுக்குமான பத்து மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராக கருதுகிறது.[2] பன்னாட்டு குத்துச்சண்டை பெருமை காட்சியகத்திலும் உலக குத்துச்சண்டை பெருமை வாய்ந்தோர் காட்சியகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற பின்னர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். தி சிம்ப்சன்ஸ் எனப்படும் தொலைக்காட்சித் தொடரிலும் இரண்டு பகுதிகளில் (எபிசோட்) நடித்துள்ளார். தமது மகன் மார்விசிற்கு பயிற்சி அளித்து தம்மைப் போன்ற குத்துச்சண்டை வீரராக்க விரும்பினார்; இருப்பினும் தந்தையின் வெற்றியை மகனால் பெற முடியவில்லை. பிலடெல்பியாவிலுள்ள தமது உடற்பயிற்சிக்கூடத்தில் தொடர்ந்து குத்துச்சண்டைப் பயிற்சிகள் வழங்கி வந்தார்.

2011ஆம் ஆண்டின் செப்டம்பர் பின்பகுதியில் பிரேசர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து மருத்துலனையில் சேர்க்கப்பட்டார்.[3] நவம்பர் 7, 2011 அன்று இயற்கை எய்தினார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-11-10.
  2. "ibroresearch.com". Archived from the original on 2011-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  3. By DAN GELSTON, AP Sports Writer. "Ex-heavyweight champ Joe Frazier has liver cancer". San Francisco Chronicle. பார்க்கப்பட்ட நாள் November 6, 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Joe Frazier, Former Heavyweight Boxing Champ, Dies at 67". TIME. November 8, 2011. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_பிரேசியர்&oldid=3711125" இலிருந்து மீள்விக்கப்பட்டது