முகம்மது அலி

முகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),[2] ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.

முகம்மது அலி
Muhammad Ali
1967 இல் அலி
புள்ளிவிபரம்
செல்லப்பெயர்தி கிரேடேஸ்ட்,
தி சாம்ப்,
தி லூயிவிள்ளே லிப்
பிரிவுமிகுஎடை
உயரம்6 அடி 3 அங் (191 செமீ)[1]
நீட்ட தூரம்78 அங் (198 செமீ)
தேசியம்அமெரிக்கர்
பிறப்பு(1942-01-17)சனவரி 17, 1942
பிறந்த இடம்லூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 3, 2016(2016-06-03) (அகவை 74)
இறப்பு இடம்பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
நிலைOrthodox
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்61
வெற்றிகள்56
வீழ்த்தல் வெற்றிகள்37
தோல்விகள்5
பதக்க சாதனைகள்
ஆண்களுக்கான குத்துச்சண்டை
 ஐக்கிய அமெரிக்கா போட்டியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1960 ரோம் மெல்லிய மிகு எடை

1964 ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975 ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967 ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார். வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால், அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி இயற்கை எய்தினார்.[3]

mani==மேற்கோள்கள்==

  1. "Cassius Clay". sports-reference.com. Sports Reference LLC. Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2014.
  2. Schuppe, Jon (சூன் 3, 2016). "Muhammad Ali, "The Greatest" of all time, dead at 74". NBC News. http://www.nbcnews.com/news/sports/muhammad-ali-greatest-all-time-dead-74-n584776. பார்த்த நாள்: சூன் 3, 2016. 
  3. "குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016.

a

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அலி&oldid=3567863" இலிருந்து மீள்விக்கப்பட்டது