இஸ்லாம் தேசம்
இஸ்லாம் தேசம் (Nation of Islam) என்பது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும்.1930ல் இவ்வமைப்பை வாலஸ் ஃபரத் முகமது என்பவர் டிட்ராயிட், மிச்சிகனில் உருவாக்கினார்.[2]
உருவாக்கம் | சூலை 4, 1930 |
---|---|
நிறுவனர் | வாலஸ் ஃபரத் முகமது |
நிறுவப்பட்ட இடம் | டிட்ராயிட்,அமெரிக்க ஐக்கிய நாடு |
வகை | அரசியல் சமயம் |
சட்ட நிலை | Active |
தலைமையகம் | மரியம் மசூதி, சிகாகோ |
தலைமையகம் | |
துறைகள் | அரசியல், சமயம் |
உறுப்பினர்கள் (2007) | 50,000 (est.)[1] |
ஆட்சி மொழி | ஆங்கிலம், Arabic |
தலைவர் | லூயிஸ் ஃபரக்கான் |
முக்கிய நபர்கள் | எலிஜா முகமது, மால்கம் எக்ஸ் (before his conversion to orthodox Islam) |
துணை நிறுவனங்கள் | அமெரிக்க முசுலிம்கள் |
முழக்கம் | "Justice or Else!" |
வலைத்தளம் | www |
கொள்கை
தொகுஅமெரிக்காவில் அனைத்து ஆப்பிரிக்க,அமெரிக்கர்களின் ஆன்மீக, மன,சமூக,பொருளாதார நிலையை மேம்படுத்தும் இலக்குகள்.[3]
எலிஜா முகமது
தொகு1934ல் ஃபரத் முகமதுக்கு பிறகு, எலிஜா முகமது, இஸ்லாம் தேச அமைப்பை வழி நடத்தினார்.எலிஜா முகமது அமெரிக்காவில் இஸ்லாமிய முகமது பல்கலைக்கழகம் எனும் கல்வி நிறுவனத்தை நிறுவினார்.[4]
மால்கம் எக்ஸ்
தொகுஎலிஜா முகமது தலைமை போது புகழ்பெற்ற பேச்சாளர் மால்கம் எக்ஸ் இச்சமயத்தை சேர்ந்ததில் 1950கள், 1960களில் அமெரிக்காவின் சமூக உரிமை இயக்கத்தில் இச்சமயத்துக்கு செல்வாக்கு வந்தது. ஆனால் மால்கம் எக்ஸின் 1965 கொலைக்குப் பின்பு இஸ்லாம் தேசம் பிரிய ஆரம்பித்தது.
புதிய அமைப்பு தோற்றம்
தொகு1975 இல் எலிஜா முகமது காலமானார். இவரின் மகன், இமாம் வாரித் தீன் முகமது இஸ்லாம் தேசத்தை சுணி இஸ்லாமுக்கு மாற்ற முனைந்தார். இதனால் 1978 இல் இஸ்லாம் தேசம் இரண்டாக பிரிந்தது. வாரித் தீன் முகமது ஒரு பிரிவில் தலைவராக இருந்து பெயரை "முஸ்லிம் அமெரிக்க சங்கம்" என்று மாற்றினார்.
இரண்டாம் பிரிவில் லூயிஸ் ஃபரக்கான் தலைவராக இருந்து அசல் மாதிரி இஸ்லாம் தேசம் மீண்டும் ஏற்படுத்தப் பட்டது.சிக்காகோவில் அமைந்த மரியம் மசூதியில் லூயிஸ் பர்கானின் இஸ்லாம் தேசத்தின் தலைமையகம் உள்ளன.[5]
பத்திரிக்கை
தொகுத பைனல் கால் (இறுதி அழைப்பு) சிக்காகோவில் வெளியிடப்படும் செய்தித்தாள் ஆகும்
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ MacFarquhar, Neil (February 26, 2007). "Nation of Islam at a Crossroad as Leader Exits". The New York Times. http://www.nytimes.com/2007/02/26/us/26farrakhan.html?pagewanted=all.
- ↑ Nation of Islam. "Nation of Islam in America: A Nation of Beauty & Peace". பார்க்கப்பட்ட நாள் 10 April 2014.
- ↑ "A Brief History on the origin of the Nation of Islam in America". Nation of Islam. March 1, 2010. பார்க்கப்பட்ட நாள் March 29, 2012.
- ↑ C. Eric Lincoln (1994). Black Muslims in America. Wm. B. Eerdmans Publishing Co. pp. 88, 89 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-0703-8.
- ↑ Mohammed, Asahed (February 28, 2013). "Nation of Islam Auditors graduation held for third Saviours' Day in a row". Final Call. பார்க்கப்பட்ட நாள் April 22, 2013.