நிமலன் சௌந்தரநாயகம்

ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் (Ashley Nimalan Soundaranayagam, 6 நவம்பர் 1950 - 7 நவம்பர் 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.

நிமலன் சௌந்தரநாயகம்
Nimalan Soundaranayagam
இலங்கை நாடாளுமன்றம்
மட்டக்களப்பு மாவட்டம்
பதவியில்
2000–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-11-06)6 நவம்பர் 1950
இறப்பு7 நவம்பர் 2000(2000-11-07) (அகவை 50)
கிரான், இலங்கை
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
தொழில்ஆசிரியர்
இனம்இலங்கைத் தமிழர்

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரநாயகம் பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.[1][2]

சௌந்தரநாயகம் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை.[3][4] மீண்டும் இவர் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

படுகொலை

தொகு

சௌந்தரநாயகம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் 2000 நவம்பர் 7 இல் கிரான் என்ற ஊரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2][6] இவரது கொலைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தலைவரும் இலங்கை அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Soundranayagam, Ashley Nimalanayagam". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 "Batticaloa MP shot dead". தமிழ்நெட். 7 நவம்பர் 2000. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5560. 
  3. தர்மரத்தினம் சிவராம் (16 யூன் 1996). "PA's new bank". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/960616/taraki.html. 
  4. "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
  5. "General Election 2000 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
  6. Subramanian, Nirupama (8 நவம்பர் 2000). "TULF MP shot". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130818174123/http://hindu.com/2000/11/08/stories/0308000f.htm. 
  7. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". தெ நேஷன்]] இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
  8. "Special Report No 17 - Rewarding Tyranny: Undermining the Democratic Potential for Peace". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. 7 அக்டோபர் 2003. Archived from the original on 2012-06-27. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமலன்_சௌந்தரநாயகம்&oldid=3560711" இலிருந்து மீள்விக்கப்பட்டது