ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் (John F.Kennedy International Airport) (IATA: JFK, ICAO: KJFK, FAA LID: JFK) நியூயார்க்கின் குயீன்ஸ் பரோவில் தென் மன்ஹாட்டனிலிருந்து 12 மைல்கள் (19 km)தொலைவில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். 2010ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகுந்த பன்னாட்டுப் பயணிகள் போய்வரும் நுழைமுகமாக விளங்கியது. வட அமெரிக்காவின் பிற எந்த வானூர்தி நிலையத்தைவிட கூடுதலான பன்னாட்டுப் போக்குவரத்தை கையாண்டது.[4] இதுவே அந்நாட்டின் சரக்குப் போக்குவரத்திலும் கூடுதலான மதிப்புள்ள சரக்குகளை கையாண்ட நிலையமாக விளங்குகிறது.[5] 2010இல் இந்த வானூர்தி நிலையம் வழியே 46,514,154 பயணிகள்[2] பயணித்து உலகின் 14வது நெருக்கமிகுந்த நிலையமாகவும் அமெரிக்காவின் ஆறாவது நெருக்கமிகுந்த வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. நியூயார்க் பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே, லாகார்டியா மற்றும் நியூவர்க் வானூர்தி நிலையங்கள் மூன்றும் இணைந்து ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரும் வானூர்தி நிலைய அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இரண்டாவது நெருக்கம் மிகுந்த வானூர்தி நிலையமாகவும் மொத்த வான்பயண இயக்கங்களைக் கொண்டு முதலாவதாகவும் .உள்ளது.

ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்
2001ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜேஎஃப்கே நிலையத்தின் முனையம் 4
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்நியூயார்க் நகரம்[1]
இயக்குனர்நியூயார்க் நியூஜெர்சி நுழைமுக ஆணையம்[1]
சேவை புரிவதுநியூயார்க் நகரம்
அமைவிடம்ஜமைக்கா, நியூயார்க்
மையம்
உயரம் AMSL13 ft / 4 m
இணையத்தளம்www.panynj.gov
நிலப்படம்
அக்டோபர் 20,2011 அன்றிருந்தவாறு வானூர்தி நிலைய வரைபடம்.
அக்டோபர் 20,2011 அன்றிருந்தவாறு வானூர்தி நிலைய வரைபடம்.
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
4L/22R 11,351 3,460 கருங்காரை
4R/22L 8,400 2,560 கருங்காரை
13L/31R 10,000 3,048 கருங்காரை
13R/31L 14,572 4,423 திண்காரை
உலங்கூர்தித் தளங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
H1 60 18 கருங்காரை
H2 60 18 கருங்காரை
H3 60 18 கருங்காரை
H4 60 18 கருங்காரை
புள்ளிவிவரங்கள் (2010)
வானூர்தி இயக்கம் (ACI)[2]399,626
பயணிகள்(ACI)[2]46,514,154
நியூயார்க் நகர வரைபடத்தில் ஜேஎஃப்கே (1), லாகார்டியா (2) மற்றும் நியூவர்க் (3) வானூர்திநிலையங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Port Authority of New York and New Jersey(2004-11-30). "Governor Pataki and Mayor Bloomberg Announce Closing of Multi-Billion Dollar Agreement to Extend Airport Leases". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-08-08. “The Port Authority has operated JFK and LaGuardia for more than 55 years. The original 50-year lease [with the City of New York] was signed in 1947 and extended to 2015 under an agreement struck in 1965.” "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-16.
  2. 2.0 2.1 2.2 2010 North American Final Rankings பரணிடப்பட்டது 2011-05-15 at the வந்தவழி இயந்திரம். Airports Council International. May 28, 2011.
  3. FAA Airport Master Record for JFK (Form 5010 PDF). Federal Aviation Administration. August 27, 2009.
  4. Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation (2006). "U.S. International Travel and Transportation Trends, BTS02-03" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-06-15.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation (2004). "America's Freight Transportation Gateways" (PDF). Archived (PDF) from the original on 2006-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18.

வெளியிணைப்புகள்

தொகு