சுசேதா கிருபளானி
இந்திய விடுதலையின் வெள்ளையனே வெளியேறு போராட்ட வீராங்கனை
சுசேதா கிருபளானி (Sucheta Kriplani) (வங்காள மொழி: সুচেতা কৃপলানী, இந்தி: सुचेता कृपलानी) (சூன் 25, 1908 - டிசம்பர் 1, 1974) இந்தியா உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமை உடையவர்.
சுசேதா கிருபளானி | |
---|---|
உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள் | |
பதவியில் 02.10.1963–14.03.1967 | |
முன்னையவர் | சந்திர பானு குப்தா |
பின்னவர் | சந்திர பானு குப்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சூன் 1908 அம்பாலா, அரியானா |
இறப்பு | 1 திசம்பர் 1974 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஹரியானாவில் இருந்த வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் சுசேதா. இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவார்.
காந்தியடிகளின் வழியைப் பின்பற்றிய சுசேதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இந்தியப் பிரிவினைக் கலவரத்தின் போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரையில் சுசேதாவும் கலந்து கொண்டார்.
1947 ஆகஸ்டு 15 அன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில் வந்தே மாதரம் பாடலை இவர் பாடினார்.