நவகாளிப் படுகொலைகள்

இந்தியப் பிரிவினை

நவகாளிப் படுகொலைகள் (Noakhali genocide or Noakhali Carnage,(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.[4] இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.[2][5] இந்த தாக்குதலில் சரியாக லட்சத்து ஐம்பதாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.[6]அவருடன் எல்லை காந்தி கான் அப்துல் கப்பார் கான் அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது நவகாளி யாத்திரை எனப்பட்டது.[7]

நவகாளிப் படுகொலைகள்
தப்பிப் பிழைத்தவருடன் உரையாடும் காந்தி
இடம்நவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய வங்காளதேசம்)
நாள்அக்டோபர் - நவம்பர் 1946
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்காள இந்துக்கள்
தாக்குதல்
வகை
படுகொலை, கட்டாய மதமாற்றம்
ஆயுதம்Ramdaos, Teta, Koch
இறப்பு(கள்)285[1]; மற்ற ஆதாரங்களின்படி 5,000[2][3]
தாக்கியோர்முஸ்லிம் தேசியப் படை, முன்னாள் இரானுவத்தினர், இசுலாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள்
சாவி எழுதிய நவகாளி யாத்திரை எனும் நூல்

தமிழக எழுத்தாளர் சாவி என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. ROY, Sukumar (1947). Noakhalite Mahatma (নোয়াখালীতে মহাত্মা) (in Bengali). 9 Shyama Charan Dey Street, Calcutta: Orient Book Company. p. 14.{{cite book}}: CS1 maint: location (link)
  2. 2.0 2.1 "India: Written in Blood". Time. 28 October 1946. p. 42. Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.
  3. Khan, Yasmin (2017) [First published 2007]. The Great Partition: The Making of India and Pakistan (New ed.). Yale University Press. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-23032-1.
  4. Time. 28 October 1946.
  5. "Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946". Archived from the original on 2018-09-20. பார்க்கப்பட்ட நாள் 2018-09-23.
  6. இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?
  7. https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive
  8. நவகாளி யாத்திரை

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Noakhali genocide
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகாளிப்_படுகொலைகள்&oldid=3720609" இலிருந்து மீள்விக்கப்பட்டது