பண்ணைப்புரம்

பண்ணைபுரம் (ஆங்கிலம்:Pannaipuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 32 கி.மீ. தொலைவில், உத்தமபாளையம் அருகே உள்ளது. ஏலக்காய் தோட்ட முதலாளிகள் அதிகம் கொண்ட ஊராகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 9,323 மக்கள்தொகையும், [1] 15.36 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

புகழ் பெற்றவர்கள்

தொகு
  • இளையராஜா, திரைப்பட இசை அமைப்பாளர், பாடகர்
  • கங்கை அமரன், திரைப்பட இசை அமைப்பாளர், பாடகர்
  • பாவலர் வரதராஜன், இசை அமைப்பாளர் (இளையராஜாவின் அண்ணன்)
  • கணேஷ்ராஜா, இசை அமைப்பாளர்,

மேற்கோள்கள்

தொகு
  1. Pannaipuram Population Census 2011
  2. பண்ணைப்புரம் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணைப்புரம்&oldid=4155968" இலிருந்து மீள்விக்கப்பட்டது