திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)

திருப்பத்தூர் மாவட்ட நகரம்
(திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பத்தூர் (Tirupattur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். இதுவே திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இது சந்தன மாநகர் என்றும் அழைக்கப்படுகின்றது.

திருப்பத்தூர்
ஏலகிரி மலையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
ஏலகிரி மலையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
அடைபெயர்(கள்): சந்தன நகரம்
திருப்பத்தூர் is located in தமிழ் நாடு
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
திருப்பத்தூர் is located in இந்தியா
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°30′N 78°36′E / 12.50°N 78.60°E / 12.50; 78.60
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பத்தூர்
பகுதிதொண்டை நாடு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்திருப்பத்தூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்அண்ணாத்துரை
 • சட்டமன்ற உறுப்பினர்அ. நல்லதம்பி
 • மாவட்ட ஆட்சியர்அமர் குஷாவா, இ.ஆ.ப
ஏற்றம்
387 m (1,270 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்64,125
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
635 601, 635 602
தொலைபேசி குறியீடு04179
வாகனப் பதிவுTN-83
சென்னையிலிருந்து தொலைவு224 கி.மீ (139 மைல்)
வேலூரிலிருந்து தொலைவு90 கி.மீ (56 மைல்)
சேலத்திலிருந்து தொலைவு118 கி.மீ (73 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு255 கி.மீ (158 மைல்)
பாலின விகிதம்993 /

வரலாறு

தொகு

திருப்பத்தூர் நிறுவப்பட்ட தேதி தெரியவில்லை. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆனது, திருப்பத்தூரில் ஆய்வு செய்து இதுவரை, பல கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளது. ஏலகிரி மலையில் உள்ள மங்களம் கிராமத்தில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது, அதை எதிர்த்து ஏலகிரி மலையில் உள்ள தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை நடுகல் கல்வெட்டு தெரிவிக்கிறது.எனவே 1,300 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் என்று வழங்கப்பட்ட பெயர் இன்றும் தொடர்வதாக க. மோகன் காந்தி குறிப்பிடுகிறார்.[1] சோழர்கள், விஜயநகரப் பேரரசு, போசளப் பேரரசு போன்ற பல்வேறு ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் இந்நகரம் உதாரணமாக, பின்வரும் பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது:

  • ஸ்ரீ மாதவ சதுர்வேதி மங்கலம்,
  • வீர நாராயண சதுர்வேதி மங்கலம்,
  • திருப்பேரூர் மற்றும்
  • பிரம்மபுரம் (பிரம்மீஸ்வரம்).

தற்போதைய பெயரான "திருப்பத்தூர்'" ஆனது "திருப்பேரூர்" என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, நகரத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு கோட்டை இருந்தது. அதன் நுழைவு, கோட்டாய் தர்வாஜா, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் இருந்திருக்கலாம், ஏனெனில், தமிழில் "கோட்டாய்" என்ற வார்த்தையின் அர்த்தம் "கோட்டை" என்றும், இந்தி / உருது மொழியில் "தர்வாஜா" என்ற வார்த்தைக்கு, "கேட்" அல்லது "கதவு" என்றும் பொருளாகும். இப்பகுதி இன்னும் "கோட்டாய்" (கோட்டை) என்று அழைக்கப்படுகிறது.

ஆகத்து 15, 2019 அன்று, வேலூர் மாவட்டத்திலிருந்து, திருப்பத்தூர் ஒரு புதிய மாவட்டமாக உருவானது. திருப்பத்தூர் நகரம் அதன் தலைமையகமாக அமைந்தது.

அமைவிடம்

தொகு

திருப்பத்தூரிலிருந்து, சேலம் 118 கி.மீ., வேலூர் 90 கி.மீ., கிருஷ்ணகிரி 40 கி.மீ., ஒசூர் 85 கி.மீ., திருவண்ணாமலை 85 கி.மீ., பெங்களூரு 136 கி.மீ., தருமபுரி 60 கி.மீ. மற்றும் சென்னை 224 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

தொகு
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
81.93%
முஸ்லிம்கள்
16.39%
கிறிஸ்தவர்கள்
1.52%
சைனர்கள்
0.47%
சீக்கியர்கள்
0.01%
பௌத்தர்கள்
0.01%
மற்றவை
0.26%
சமயமில்லாதவர்கள்
0.00%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 4,419 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 19,487 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2321 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,011 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,822 மற்றும் 116 ஆகவுள்ளனர்.[2]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருப்பத்தூரில் இந்துக்கள் 81.93%, முஸ்லிம்கள் 16.39%, கிறிஸ்தவர்கள் 1.52%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.47%, 0.26% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.

போக்குவரத்து

தொகு

சாலைப்போக்குவரத்து

தொகு

இந்த ஊருக்கு 85% போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. திருப்பத்தூர் நகரமானது, இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் இரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் கிருஷ்ணகிரி (வழியாக) நாட்ராம்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச். 46) நகரத்தின் புறநகர்ப் பகுதி வழியாகச் செல்கிறது. இந்நகரமானது, சென்னை (224 கி.மீ.), பெங்களூரு (136 கி.மீ.), சேலம் (118 கி.மீ.), வேலூர் (90 கி.மீ.), ஆகிய நகரங்களை வெவ்வேறு திசைகளில் பிரிக்கிறது. பெங்களூர் நகரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக, பெரும்பாலான பேருந்துகள் இந்நகரத்தை வந்தடைகின்றன. இங்கிருந்து சென்னை, வேலூர், அரூர், சேலம், பெங்களூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இருப்புப்பாதை போக்குவரத்து

தொகு

திருப்பத்தூர் தொடருந்து நிலையம், தென்னக இரயில்வேயின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. இது, பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து வடக்கு பகுதியில் சென்றால் ஜோலார்பேட்டை சந்திப்பு 8 கி.மீ. தொலைவில் மற்றும் தென்மேற்கு பகுதியில் சென்றால் மொரப்பூர் தொடருந்து நிலையமும், இதற்கு அடுத்துள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும். ஜோலார்பேட்டை தொடருந்து சந்திப்பு இதற்கு அருகாமையில் இருப்பதால் சில விரைவு தொடருந்து மட்டுமே இங்கு நிறுத்தப்படுகின்றன.

அருகிலுள்ள விமான நிலையங்கள்

தொகு

சேலம் (105 கி.மீ.) மற்றும் வேலூர் வானூர்தி பயிற்சி நிலையம் (85 கி.மீ.); அருகிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் பெங்களூரு (135 கி.மீ.) மற்றும் சென்னை (225 கி.மீ.) ஆகிய விமான நிலையங்களாகும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி
மக்களவை உறுப்பினர் அண்ணாத்துரை

திருப்பத்தூர் நகராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த அண்ணாத்துரை வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த அ. நல்லதம்பி வென்றார்.

வானிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) (1951–1980)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.6
(96.1)
39.4
(102.9)
41.2
(106.2)
45.8
(114.4)
46.3
(115.3)
41.8
(107.2)
39.6
(103.3)
39.3
(102.7)
40.0
(104)
37.1
(98.8)
36.3
(97.3)
34.3
(93.7)
46.3
(115.3)
உயர் சராசரி °C (°F) 29.6
(85.3)
32.3
(90.1)
34.9
(94.8)
36.3
(97.3)
37.0
(98.6)
34.8
(94.6)
33.2
(91.8)
33.4
(92.1)
32.9
(91.2)
31.5
(88.7)
29.9
(85.8)
29.0
(84.2)
32.9
(91.22)
தாழ் சராசரி °C (°F) 16.1
(61)
18.3
(64.9)
20.4
(68.7)
22.6
(72.7)
23.4
(74.1)
23.1
(73.6)
22.9
(73.2)
22.9
(73.2)
22.6
(72.7)
21.9
(71.4)
19.8
(67.6)
17.2
(63)
20.93
(69.68)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.3
(50.5)
10.5
(50.9)
12.8
(55)
16.6
(61.9)
18.3
(64.9)
19.1
(66.4)
18.4
(65.1)
17.0
(62.6)
14.6
(58.3)
15.5
(59.9)
12.1
(53.8)
10.2
(50.4)
10.2
(50.4)
பொழிவு mm (inches) 1.3
(0.051)
4.3
(0.169)
8.3
(0.327)
22.0
(0.866)
103.8
(4.087)
58.5
(2.303)
124.3
(4.894)
132.4
(5.213)
192.5
(7.579)
190.2
(7.488)
101.8
(4.008)
42.1
(1.657)
981.5
(38.642)
சராசரி பொழிவு நாட்கள் 0.1 0.3 0.5 1.6 5.0 3.1 5.5 5.6 7.9 8.0 4.7 1.7 44
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை,[3]

சுற்றுலாத் தலங்கள்

தொகு

வரைபட வழிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "வரலாற்றைப் பாதுகாக்கும் ஏலகிரி மலை". 2024-05-02. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. திருப்பத்தூர் நகர மக்கள்தொகை பரம்பல்
  3. "Climatological Information for Tirupattur,India". India Meteorological Department.[தொடர்பிழந்த இணைப்பு]