திருக்கோவிலூர் வட்டம்

(திருக்கோயிலூர் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கோவிலூர் வட்டம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருக்கோவிலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 86 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் (பகுதி) மற்றும் மணலூர்ப்பேட்டை பேரூராட்சிகள் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 446,531 ஆகும். அதில் 226,065 ஆண்களும், 220,466 பெண்களும் உள்ளனர். 97,493 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 87.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 69.32% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 56729 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 135,337 மற்றும் 2,758 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.87%, இசுலாமியர்கள் 2.17% , கிறித்தவர்கள் 5.76% , சமணர்கள் 0..05% மற்றும் பிறர் 0.02% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோவிலூர்_வட்டம்&oldid=3834288" இலிருந்து மீள்விக்கப்பட்டது