இந்திய ஆட்சிப் பணி

(இந்திய ஆட்சிப்பணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரசாசனிக் சேவா) அனைத்து இந்தியப் பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.[1][2][3]

வரலாறு

தொகு

இந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது.

தேர்வு மற்றும் பயிற்சிகள்

தொகு

ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக ஒன்றிய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).

தேர்வு நிலைகள்

தொகு
  • இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
    • முதனிலை தேர்வு (Preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் (Main) தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் (Interview) தேர்வுக்கு புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவர் கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு ஒரு விருப்பப் பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு நடைமுறை

தொகு
இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண்
முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் (தாள்-I) 100 2 200
குடிமை பணி உளச்சார்பு தேர்வு (தாள்-II) 80 2.5 200
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 400
முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)
கட்டுரை """" 250 250 ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)
கட்டாய மொழி தாள் (தகுதி வாய்ந்தனவாக)
பொதுப் பாடம் 4 தாள்கள் (தாள்கள் I,II,III மற்றும் IV) ஒவ்வொரு தாளுக்கும் 250 ம.பெ 1000
விருப்ப பாடம் 2 தாள்கள் (தாள்கள் I மற்றும் II) ஒவ்வொரு தாளுக்கும் 250 ம.பெ 500
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 275

பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணி

தொகு

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "CADRE STRENGTH OF INDIAN ADMINISTRATIVE SERVICE (AS ON 01.01.2017)" (PDF). Department of Personnel and Training, இந்திய அரசு. 1 January 2017. Archived from the original (PDF) on 17 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
  2. "Service Profile for the Indian Administrative Service" (PDF) (in ஆங்கிலம்). Department of Personnel and Training, இந்திய அரசு. Archived from the original (PDF) on 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
  3. Bhattacharjee, Subhomoy (22 June 2017). "In defence of administrative continuity" (in en). பிசினஸ் ஸ்டாண்டர்ட் (New Delhi). இணையக் கணினி நூலக மையம்:496280002 இம் மூலத்தில் இருந்து 29 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171229095341/http://www.business-standard.com/article/economy-policy/in-defence-of-administrative-continuity-117062201079_1.html. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஆட்சிப்_பணி&oldid=4169573" இலிருந்து மீள்விக்கப்பட்டது