காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காடாங்குளத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,08,897 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 55,630 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,422 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகாட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- ஆத்தூர்
- ஆப்பூர்
- அஞ்சூர்
- ஆலப்பாக்கம்
- கொண்டமங்கலம்
- கொளத்தூர்
- பெரியபொத்தேரி
- சிங்கபெருமாள் கோயில்
- வில்லியம்பாக்கம்
- வெங்கடாபுரம்
- வேங்கடமங்கலம்
- வீராபுரம்
- வண்டலூர்
- வல்லம்
- ஊரப்பாக்கம்
- ஊனமாஞ்சேரி
- திருவடிசூலம்
- திம்மாவரம்
- தென்மேல்பாக்கம்
- ரெட்டிபாளையம்
- புலிப்பாக்கம்
- பெருமாட்டுநல்லூர்
- பழவேலி
- பட்ரவாக்கம்
- பாலூர்
- ஒழலூர்
- நெடுங்குன்றம்
- நல்லம்பாக்கம்
- மேலமையூர்
- மண்ணிவாக்கம்
- குன்னவாக்கம்
- குமிழி
- கீரப்பாக்கம்
- காயரம்பேடு
- கருநிலம்
- காரணைபுதுச்சேரி
- கல்வாய்
- குருவன்மேடு
- செட்டிபுண்ணியம்