சத்ய நாராயண சின்கா

இந்திய அரசியல்வாதி

சத்ய நாராயண் சின்கா (Satya Narayan Sinha) (9 ஜூலை 1900 - 26 ஜூலை 1983) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராக பணியாற்றினார்.

சத்ய நாராயண சின்கா
4வது [[மத்தியப் பிரதேச ஆளுநர்]]
பதவியில்
8 மார்ச் 1971 – 13 அக்டோபர் 1977
முதலமைச்சர் சியாமா சரண் சுக்லா
பிரகாஷ் சந்திர சேத்தி
கைலாஷ் சந்திர ஜோஷி
முன்னவர் கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி
பின்வந்தவர் என். என். வான்ச்சு
சுகாதாரத் துறை
பதவியில்
14 நவம்பர் 1967 – 14 பிப்ரவரி 1969
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் சிறீபதி சந்திரசேகர்
பின்வந்தவர் கோதர்தாஸ் காளிதாஸ் ஷா.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 1963 – ஜூன் 1964
பிரதமர் ஜவகர்லால் நேரு
முன்னவர் பி. வி. கேஸ்கர்
பின்வந்தவர் இந்திரா காந்தி
மக்களவத் தலைவர்
பதவியில்
24 ஜனவரி 1966 – 3 மார்ச் 1967
முன்னவர் குல்சாரிலால் நந்தா
பின்வந்தவர் இந்திரா காந்தி
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 9, 1900(1900-07-09)
சம்புபட்டி, தர்பங்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய சமஸ்திபூர், பீகார், India)
இறப்பு 26 சூலை 1983(1983-07-26) (அகவை 83)
சமஸ்திபூர் , பிகார்
தேசியம்  இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பணி அரசியல்வாதி

தொழில் தொகு

இவர், 1952இல் சமஸ்தீபூர் கிழக்கு மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1957, 1962இல், சமஸ்தீபூரிலிருந்தும், 1967இல் பீகாரிலுள்ள தர்பங்கா மக்களவைத் தொகுதியிலிருந்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3][4]

சின்கா, 1964 முதல் 1967 வரை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும், 1967 முதல் 1971 வரை சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 1971 இல் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு 1977 வரை பணியாற்றினார்.[5] இவர் 1983 ஜூலை 26 அன்று தனது 83 வயதில் இறந்தார்.[6]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_நாராயண_சின்கா&oldid=3552772" இருந்து மீள்விக்கப்பட்டது