எச். ஆர். பரத்வாஜ்

இந்திய அரசியல்வாதி

ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் (Hansraj Bhardwaj) (17 மே 1937 - 8 மார்ச் 2020) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 முதல் 2014 வரை கர்நாடக ஆளுநராகவும், 2012 முதல் 2013 வரை கேரள ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். அஷோக் குமார் சென்னுக்குப் பிறகு, சுதந்திரத்திற்குப் பிறகு சட்ட அமைச்சகத்தில் இரண்டாவது நீண்ட பதவிக் காலம் வகித்த சாதனையை இவர் கொண்டுள்ளார். இவர் ஒன்பது ஆண்டுகள் மாநில அமைச்சராகவும், ஐந்து ஆண்டுகள் சட்டம், நீதி அமைச்சரவையாகவும் இருந்தார். தமிழக ஆளுநராகவும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த கொனியேட்டி ரோசையா இவருக்குப் பின் 2014இல் கர்நாடக ஆளுநரானார்.[2]

எச். ஆர். பரத்வாஜ்
16வது கர்நாடக ஆளுநர்
பதவியில்
25 ஜூன் 2009 – 28 ஜூன் 2014
முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா
டி. வி. சதானந்த கௌடா
செகதீசு செட்டர்
சித்தராமையா
முன்னவர் இராமேசுவர் தாக்கூர்
பின்வந்தவர் வாஜுபாய் வாலா
கேரள ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
1 மார்ச் 2012 – 9 மார்ச் 2013
முதலமைச்சர் உம்மன் சாண்டி
முன்னவர் பாரூக் மரைக்காயர்
பின்வந்தவர் நிகில் குமார்
27வது சட்ட அமைச்சர்
பதவியில்
22 மே 2004 – 28 மே 2009
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் அருண் ஜெட்லி
பின்வந்தவர் வீரப்ப மொய்லி
தனிநபர் தகவல்
பிறப்பு 17 மே 1937
கடி சாம்ப்லா கிலோய், ரோத்தக் மாவட்டம், பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய அரியானா, இந்தியா)
இறப்பு 8 மார்ச் 2020 (வயது 82)[1]
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

16 ஜனவரி 2012 அன்று, இவருக்கு கேரள ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[3] இவர் 9 மார்ச் 2013 வரை பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை தொகு

 
எச். ஆர். பரத்வாஜ் 24 மே 2004 அன்று புது தில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சராக பொறுப்பேற்றார்

பரத்வாஜ் முதன்முதலில் ஏப்ரல் 1982 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் 31 திசம்பர் 1984 முதல் நவம்பர் 1989 வரை மாநில அமைச்சராக பணியாற்றினார். மேலும், ஏப்ரல் 1988 இல் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ஜூன் 21 முதல் 1992 ஜூலை 2 வரை திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும் (தனி பொறுப்பு) இருந்தார். 3 ஜூலை 1992 முதல் மே 1996 வரை சட்டம், நீதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சராகவும் இருந்தார். ஏப்ரல் 1994 மற்றும் ஏப்ரல் 2000 இல் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 22 மே 2004 முதல் 28 மே 2009 வரை இவர் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார்.

முன்னதாக மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பரத்வாஜ் பின்னர், [4] அரியானாவிலிருந்து மாநிலங்கவைக்கு 20 மார்ச் 2006 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

சர்ச்சைகள் தொகு

போபர்ஸ் ஊழல் தொகு

மார்ச் 2009 இல், போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒத்தோவியோ குவாத்ரோச்சியின் முடங்கிய இரண்டு வங்கிக் கணக்குகளை மீண்டும் தொடங்குவதற்கு இவர் முன்முயற்சி எடுத்தார். குறிப்பாக, கணக்குகளை முடக்கிய நடுவண் புலனாய்வுச் செயலகதை இவர் ஆலோசிக்கவில்லை என்று தெரிகிறது. [6]

கர்நாடக ஆளுநராக தொகு

ஜூலை 2010 இல், பி. எஸ். எடியூரப்பா அரசாங்கத்தின் அமைச்சர்களான சக்திவாய்ந்த பெல்லாரி சகோதரர்கள்,, குறிப்பாக சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி இவர் கூறிய கருத்துக்கள் தேசிய விவாதத்தை உருவாக்கியது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஆர்._பரத்வாஜ்&oldid=3684376" இருந்து மீள்விக்கப்பட்டது