வாஜுபாய் வாலா

இந்திய அரசியல்வாதி

வாஜுபாய் ருதாபாய் வாலா (Vajubhai Rudabhai Vala) (பிறப்பு 23 ஜனவரி 1937) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1 செப்டம்பர் 2014 முதல் 6 ஜூலை 2021 வரை கர்நாடகாவின் 18வது ஆளுநராக இருந்தார்.[2] குர்சித் ஆலம் கானுக்குப் பிறகு கர்நாடகாவில் மிக நீண்ட காலம் ஆளுநராக இருந்தார்.[3]

வாஜுபாய் ருதாபாய் வாலா
18வது கருநாடக ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 10 ஜூலை 2021
முன்னையவர்கொனியேட்டி ரோசையா
பின்னவர்தவார் சந்த் கெலாட்
குசராத்து சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
23 ஜனவரி 2012 – 31 ஆகஸ்ட் 2014
முன்னையவர்கணபத் வாசவா
பின்னவர்மங்குபாய் சா. பட்டேல் (பொறுப்பு)
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
ஜூலை 1985 – பிப்ரவரி 2002
முன்னையவர்மணிபாய் ரான்பரா
பின்னவர்நரேந்திர மோதி
பதவியில்
திசம்பர் 2007 – 31 ஆகஸ்ட் 2014
முன்னையவர்நரேந்திர மோதி
பின்னவர்விஜய் ருபானி
தொகுதிராஜ்கோட் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சனவரி 1937 (1937-01-23) (அகவை 87)[1]
ராஜ்கோட், ராஜ்கோட் மாநிலம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போது குசராத்து, இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மனோரமாபஹன்
பிள்ளைகள்2 மகள்கள், 2 மகன்கள்
கல்விஇளம் அறிவியல்,
இளங்கலைச் சட்டம்
கையெழுத்து
As of 31 ஆகஸ்ட், 2014
மூலம்: [1]

2012 முதல் 2014 வரை குசராத்து சட்டமன்றத்தின் சபாநாயகராக வாஜுபாய் பணியாற்றினார். இவர் இன்னும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். இவர் குசதாத்து அரசாங்கத்தில் 1997 முதல் 2012 வரை நிதி, தொழிலாளர், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ராஜ்கோட் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்றத்துக்கு பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழில்

தொகு

இவர், தனது அரசியல் வாழ்க்கையை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் தொடங்கினார். பின்னர் 1971இல் பாரதீய ஜன சங்கத்தில் சேர்ந்தார். 1975இல் நெருக்கடி நிலையின் போது பதினோரு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[4] 1980களில் ராஜ்கோட் நகரத் தந்தையாக இருந்தார். பின்னர் ராஜ்கோட்டிலிருந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1998 முதல் 2012 வரை நிதி, வருவாய் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றினார். இவர் இரண்டு முறை நிதி அமைச்சராக இருந்தார். நிதியமைச்சராக குசராத்து சட்டமன்றத்தில் வரவு செலவு அறிக்கையை 18 முறை தாக்கல் செய்த சாதனையை இவர் கொண்டுள்ளார். திசம்பர் 2012இல் சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 2014 வரை பணியாற்றினார். செப்டம்பர் 2014இல் கர்நாடக ஆளுநராக[5] [6] [7] [8] [9] [10] [11] நியமிக்கப்பட்டார்.

இவர், ராஜ்கோட் நாகரிக் சககாரி வங்கியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். அங்கு இவர் வங்கி சேவையை திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, மேம்படுத்தினார். 1975-90 காலகட்டத்தில் ஐந்து வருடங்கள் வங்கியின் தலைவராகவும் இருந்தார்.[12]

சர்ச்சை

தொகு

2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது இவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். இந்திய தேசிய காங்கிரசும், ஜனதா தளமும் (மதச்சார்பற்ற) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால், அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். தனது பெரும்பான்மையை நிரூபிக்க புதிய முதல்வர் பி. எஸ். எடியூரப்பாவுக்கு 18 நாட்கள் அவகாசமும் அளித்தார். இவரது முடிவை நாட்டிலுள்ள அனைத்து பாஜக அல்லாத கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. மேலும் இந்த விவகாரத்தில் காங்கிரசு கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது. எந்தவொரு கூட்டணிக்கும்/கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத நிலையில், அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதே நீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு இவர் வழங்கிய 18 நாள் நேர வரம்பை வெறும் 3 நாட்களாகக் குறைத்தது. மேலும் வாக்களிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எடியூரப்பா தன்னால் பெரும்பான்மையை திரட்ட முடியாது என்று கூறி, சபை கூடிய பிறகு பதவி விலகினார். ஜனதா தளத்தின் எச். டி. குமாரசாமி புதிய முதல்வராக பதவியேற்க அழைக்கப்பட்டார். எனினும், 14 மாதங்களுக்குப் பிறகு, குமாரசாமியின் அரசும் கவிழ்ந்தது. பின்னர் 106 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடியூரப்பா எளிதாக மீண்டும் ஆட்சியமைத்தார்.[13] [14] [15]

மேற்கோள்கள்

தொகு
  1. http://rajbhavan.kar.nic.in/biodata.html
  2. "Vajubhai Rudabhai Vala to take oath as Karnataka Guv on Sept 1". One India News. 30 August 2014 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140910233224/http://news.oneindia.in/india/vajubhai-rudabhai-vala-to-take-oath-as-karnataka-governor-on-sept-1-1512186.html. 
  3. "Vajubhai vala becomes the 2nd longest serving governor", தி இந்து, 7 July 2021
  4. "'Paniwala Mayor' reinducted into Narendra Modi cabinet". One India. 13 December 2006. http://www.oneindia.com/2006/12/13/paniwala-mayor-reinducted-into-narendra-modi-cabinet-1166009973.html. 
  5. "Vajubhai Rudabhai Vala to take oath as Karnataka Guv on Sept 1". 30 August 2014 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140910233224/http://news.oneindia.in/india/vajubhai-rudabhai-vala-to-take-oath-as-karnataka-governor-on-sept-1-1512186.html. "Vajubhai Rudabhai Vala to take oath as Karnataka Guv on Sept 1" பரணிடப்பட்டது 2014-09-10 at the வந்தவழி இயந்திரம். One India News. 30 August 2014. Retrieved 31 August 2014.
  6. "Vaju Vala unanimously elected new speaker of Gujarat Assembly". 23 January 2013. http://business-standard.com/india/news/vaju-vala-unanimously-elected-new-speakergujarat-assembly/203738/on. 
  7. "Vaju Vala named 'pro tem' Speaker of Gujarat Assembly". 26 December 2012. http://zeenews.india.com/news/gujarat/vaju-vala-named-pro-tem-speaker-of-gujarat-assembly_819086.html. 
  8. "Vaju Vala named ‘pro tem’ Speaker". 27 December 2012. http://www.indianexpress.com/news/vaju-vala-named-pro-tem-speaker/1050874/. 
  9. "177 sworn in as MLAs". 23 January 2012 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216065619/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-23/ahmedabad/36505140_1_jetha-bharwad-congress-mla-oath. 
  10. "Narendra Modi aide Vajubhai Vala is Karnataka governor". 27 August 2014. http://m.timesofindia.com/india/Narendra-Modi-aide-Vajubhai-Vala-is-Karnataka-governor/articleshow/40958900.cms. 
  11. "Karnataka's Governor Vajubhai Vala hails RSS,says posts don't matter". 26 August 2014. http://m.economictimes.com/news/politics-and-nation/karnatakas-governor-vajubhai-vala-hails-rsssays-posts-dont-matter/articleshow/40930589.cms. 
  12. "Karnataka Election Results 2018: Here's all you need to know about Karnataka Governor Vajubhai Rudabhai Vala". Moneycontrol (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  13. "India's BJP forms new government in Karnataka -- for now". https://www.cnn.com/2018/05/17/asia/india-karnataka-elections-drama-intl/index.html. 
  14. "Karnataka Governor Vajubhai Vala not alone in giving 15 days to prove majority". 2018-05-18. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/karnataka-governor-vajubhai-vala-not-alone-in-giving-15-days-to-prove-majority/articleshow/64214710.cms. 
  15. "How BJP has been outplaying Congress to form govt in states where it lacked majority". https://theprint.in/politics/how-bjp-has-been-outplaying-congress-to-form-govt-in-states-where-it-lacked-majority/380254. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஜுபாய்_வாலா&oldid=3684823" இலிருந்து மீள்விக்கப்பட்டது