தேசிய பாதுகாப்புப் படை

தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) என்பது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் புரியும் இந்திய சிறப்புப் படைப்பிரிவாகும் மற்றும் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். 1986ல் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி இப்படை உருவாக்கப்பட்டது. நவீன தொழிற்நுட்பங்களுடன் கைத்தேர்ந்த யுக்தியுடன் உள்நாட்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடைக்கைகளில் ஈடுபடுகிறது. இந்தியக் காவல் பணி தலைமையில் இயங்கும் இப்படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. கருப்புப் பருத்தி உடையும், பலக்லாவா அல்லது தலைக்கவசம் கொண்ட இப்படையினரை கருப்புப் பூனை என்றும் அழைப்பதுண்டு. ஐக்கிய இராசியத்தின் எஸ்.ஏ.எஸ் மற்றும் ஜெர்மனியின் ஜி.எஸ்.ஜி-9 படைகளை ஒத்த அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14,500 படை வீரர்களைக் கொண்டுள்ளது.[1][2]

தேசிய பாதுகாப்புப் படை
என்.எஸ்.ஜி. லோகோ
என்.எஸ்.ஜி. லோகோ
சுருக்கம்என்.எஸ்.ஜி.
குறிக்கோள்சர்வதிர சர்வோட்டம் சுரக்ஷா
எங்கும் சிறப்பான பாதுகாப்பு
துறையின் கண்ணோட்டம்
Formed1984
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyஇந்தியா
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
Constituting instrument
  • தேசிய பாதுகாப்புப் படைச் சட்டம், 1986
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
துறை நிருவாகி
  • எம். ஏ. கணபதி, தலைமை இயக்குநர்
Parent agencyஇந்தியக் காவல் பணி, இந்தியத் தரைப்படை
Notables
Significant நடவடிக்கைs
Website
www.nsg.gov.in

பணி சார்ந்த படையான இப்படையில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய சேமக் காவல் படை மற்றும் மாநில காவல்ப்படையினருடன் உருவாக்கப்படும் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிறப்பு ரேஞ்சர் குழு என இரண்டு துணைக் கூறுகள் உள்ளன.

முக்கிய நபர்களுக்கும், மிகமுக்கிய நபர்களுக்கும் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிறப்பு ரேஞ்சர் குழு மூலம் பாதுகாப்பு அளிக்கிறது.

முக்கிய பணிகள்தொகு

  • தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளித்தல்
  • வான் மற்றும் நிலத்தில் நடக்கும் கடத்தல்களை எதிர்கொள்ளுதல்
  • வெடிகுண்டு அகற்றல் (தேடுதல், கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல்)
  • வெடிகுண்டு வெடிப்பிற்கு பிறகான விசாரணை
  • குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயங்கரவாதிகளுடன் மோதல்
  • பணயக்கைதிகளை மீட்டல்


மேற்கோள்கள்தொகு

  1. content&task=view&id=24796&sectionid=30&Itemid=1&issueid=88 இந்தியா டுடே 2009 01 09 தேசிய பாதுகாப்புப் படை - நவீனமயமாக்கல்(ஆங்கிலத்தில்)
  2. ஜி.எஸ்.ஜி-9 மூலம் பயிற்சி -இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்(ஆங்கிலத்தில்)

வெளியிணைப்புகள்தொகு