பயங்கரவாத எதிர்ப்புப் படை

பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terrorism Squad (ATS), இந்தியாவின் மகாராட்டிரம், குஜராத்[1], கேரளா, உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகள், இசுலாமியத் தீவிரவாத தாக்குதல்கள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கும், எதிர்த்து நிற்பதற்கும் காவல் துறையின் சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்டு நிறுவப்பட்ட படையாகும்.[2] மகாராட்டிரா மாநிலத்தில் மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி தலைமையில் பயங்கரவாத எதிர்ப்புப் படை 19 டிசம்பர் 1990 முதல் இயங்குகிறது.[3]

பயங்கரவாத எதிர்ப்புப் படை
செயற் காலம்டிசம்பர் 1990 - தற்போது வரை
நாடுஇந்தியா
கிளைஅனைத்து கிளைகளிலும் செயல்படுகிறது
வகைகாவல்துறையின் தந்திரோபாய அலகு
பொறுப்புவான் தாக்குதல்
நெருக்கமான போர்
அதிருப்தியாளர்களை எதிர்த்தல்
தீவிரவாத எதிர்ப்பு
பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கை
நுண்ணறிவு புலனாய்வு தகவல்களை சேகரித்தல்
சிறப்பு நடவடிக்கைகள்
தீவிரவாத நடவடிக்கைகளை முன்கூட்டி தடுத்தல்
சுருக்கப்பெயர்(கள்)ATS
குறிக்கோள்(கள்)பயங்கரவாதத்தை நிறுத்தி அமைதியை தொடங்குங்கள்
"Stop terrorism and Start peace"
ஆண்டு விழாக்கள்திசம்பர் 19

இப்படையின் அதிகாரிகளுக்கு லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரங்கள் குழுக்களால் பயிற்சி வழங்கப்படுகிறது.[4] மகாராட்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை பல இடங்களில் 26 நவம்பர் 2008 மும்பை தாக்குதல்களை எதிர்கொண்டு செயலாற்றியது.

தமிழ்நாட்டில் தொகு

தமிழ்நாட்டில் பயங்கரவாத எதிர்ப்புப் படை 21 நவம்பர் 2023 அன்று நிறுவ அரசாணை வெளியிடப்பட்டது. [5][6][7][8]

பயங்கரவாத எதிர்ப்புப் படையின் குறிக்கோள்கள் தொகு

  1. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் தேச விரோத சக்திகள் செயல்படுவதைப் பற்றிய தகவல்களைப் பெறுதல்.
  2. இந்திய உளவுத்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு போன்ற உளவு அமைப்புகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல்.
  3. பிற மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
  4. மாஃபியாக்கள், குண்டர்கள் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் அகற்றுதல்
  5. போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தலைக் கண்டறிதல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Leena Misra (2003-07-22). "ATS to branch out to other cities in state – Ahmedabad – City". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
  2. "Sarat Kumar appointed as Bihar ATS Chief". Biharprabha News. 24 November 2013. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
  3. "Maharashtra ATS gets new chief" தி இந்து, 2015
  4. "The Anti-Terrorism Squad: Unsung Heroes of Indian Counter-Terrorism". 28 December 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு: முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
  6. DIG rank officer, 4 SPs: TN sets up anti-terror squad
  7. தீவிரவாதத்தை ஒழிக்க தமிழக அரசின் அதிரடி படை தயார்!
  8. Anti Terrorism Squad to be set up in T.N. Police’s Intelligence Wing: CM!

வெளி இணைப்புகள் தொகு