பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு)
பயங்கரவாத எதிர்ப்புப் படை, தமிழ்நாட்டில் நவம்பர் 2023ல் பயங்கரவாத எதிர்ப்புப் படை நிறுவ அரசாணை வெளியிடப்பட்டது. 383 பேர் கொண்ட இப்படையானது கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) மேற்பார்வையில் செயல்படும். காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) தலைமையில் செயல்படும் இப்படையில் 5 காவல் கண்காணிப்பாளர்கள், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 13 துணை கண்காணிப்பாளர்கள், 31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் உளவுப்பிரிவு காவலர்கள் மற்றும் அதிரடிப்படை காவலர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் செயல்படும் இப்படைபிரிவினரின் பணிகளுக்கு 89 புதிய வாகனங்கள் வழங்கப்படும். [1][2][3]
பயிற்சிகள்
தொகுஇப்படையினருக்கு காட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், நவீன துப்பாக்கிகள் மற்றும் தளவாடங்கள் கையாள்வதற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
சலுகைகள்
தொகுஇப்படைப்பிரிவில் பணியாற்றுபவர்களின் அடிப்படை ஊதியத்தில் 10% அல்லது ரூபாய் 20,000 இவற்றுள் எது குறைவோ அத்தொகை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும். சிறப்பு ஊதியத்திற்கும் சேர்த்து அகவிலைப்படி கணக்கிடப்படும். அவசரப் பணிக்கு வானூர்தி பயணம் அனுமதிக்கப்படும்.