சாம்பல் வேட்டைநாய்கள் (சிறப்புக் காவல்படை)

இந்திய சிறப்புக் காவல்படை

சாம்பல் வேட்டைநாய்கள் (Greyhounds), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகளை முறியடிக்க 1989ஆம் ஆண்டில் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநாரின் தலைமையில் நிறுவப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும்.[1][2][3]2020ல் இப்படையில் 2000 சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்களும் மற்றும் காவல் அதிகாரிகளும் இருந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கொண்டு . 2 சூன் 2014 அன்று நிறுவப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இப்படைகள் செயலாற்றுகிறது. சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் உள்ளதால், ஆந்திரத்தில் இப்படையின் தலைமையகம் விசாகப்பட்டினத்திலும், தெலங்கானாவில் இப்படைகளின் தலைமையகம் ஐதராபாத்திலும் செயல்படுகிறது.

இப்படையினருக்கு காட்டுப் போர் முறை பயிற்சிகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் கவச தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் தரப்படுகிறது. 1995 மற்றும் 2016 காலகட்டத்தில் இப்படையினர் 1780க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை வேட்டையாடிக் கொன்றுள்ளனர். சிறப்புப் படையினர் தரப்பில் 163 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்..

விருதுகள்

தொகு

சனவரி 2024ல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 16 மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்புப் படைகளுக்கு இடையே நடைபெற்ற அகில இந்திய போட்டிகளில், ஆந்திரப் பிரதேசத்தின் சாம்பல் வேட்டைநாய் படையினர் வென்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sharma, Aman (16 July 2012). "Home Ministry proposes to replicate Greyhounds of Andhra Pradesh in five Maoist-hit states". India Today.
  2. "Naxal strongholds can be demolished by Greyhounds force only". Daily Bhaskar. 11 June 2013. Archived from the original on 16 March 2014.
  3. "Kiran hypes Andhra Pradesh's success in Naxal war, seeks funds". Deccan Chronicle. 6 June 2013. Archived from the original on 2013-06-12.
  4. A.P. Greyhounds team wins top honours in all-India competition