பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு

பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு (Punjab Police SWAT Team) இந்தியாவின் பஞ்சாப் மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும்.பஞ்சாப் மாநில காவல்துறையிலிருந்து, இப்படைக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வரலாறு

தொகு

பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களை (Special Weapons and Tactics (SWAT) கையாளும், இச்சிறப்புக் காவல்படைப் பிரிவு 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [1]இக்காவல் படைப் பிரிவு பொதுவாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது..[1] இப்படைப்பிரிவினர் தேசிய பாதுகாப்புப் படையினர் போன்று பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி பெற்றவர்கள்[2][3] இதன் அனைத்து வீரர்களும் 28 வயதிற்குட்பட்டவர்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்துப் போராடுவதே இவர்களின் முக்கியப் பணியாகும்..

இப்படையினர் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள்

தொகு

சாதனங்கள்

தொகு
  • குண்டு துளைக்காத கவச வாகனங்கள்
  • குண்டு துளைக்காத மார்பு மற்றும் தலைக்கவசங்கள்
  • சிறுரக வானோலிக் கருவிகள்
  • பாதுகாப்பான ஆடைகள்
  • கலவரக் கட்டுப்பாடு தலைக்கவசங்கள்
  • நச்சி வாயு முகமூடிகள்
  • அதிர்ச்சி தாங்கும் கேடயங்கள்
  • கதிர் வீச்சு ஆயுதங்கள்
  • நச்சு வாயு பீச்சிடும் ஆயுதங்கள்
  • மிளகாய்ப் பொடி வீச்சும் ஆயுதங்கள்

ஆயுதங்கள்

தொகு
 
பஞ்சாப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பயன்படுத்தும் இலகு ரக இயந்திரத் துப்பாக்க்கி
  • கைத்துப்பாக்கிகள்
  • இயந்திரத் துப்பாக்கிகள்
  • தாக்குதல் துப்பாக்கிகள்
  • இருட்டிலும் பார்க்கும் கண் கண்ணாடிகள்

முக்கிய நடவடிக்கைகள்

தொகு
  • 27 சூலை 2015 அன்று குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தீனா நகர் காவல் நிலையத்தை சூறையாடிய, இராணுவச் சீருடையில் வந்த, பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவின் மூன்று தீவிரவாதிகளை இப்படையினர் சுட்டுக் கொன்றனர்.[4][5][6][7][8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு