பலக்லாவா (தொப்பி)
பலக்லாவா (balaclava) என்பது, முகத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து, தலையில் ஏனைய பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கும் துணியால் ஆன ஒருவகைத் தலையணி ஆகும். பெரும்பாலும், கண்கள் அல்லது கண்களும், வாயும் மட்டுமே திறந்து இருக்கும். உக்ரேன் நாட்டின் கிரீமியாவில் உள்ள சேவாசுத்தோபோலுக்கு அண்மையில் அமைந்துள்ள பலக்லாவா என்னும் நகரின் பெயரைத் தழுவியே இத் தலையணிக்குப் பெயர் ஏற்பட்டது.[1]
வரலாறு
தொகுகீரீமியப் போர்க் காலத்தில், பின்னப்பட்ட பலக்லாவாக்கள் பிரித்தானியப் படையினரைக் குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக அவர்களுக்கு அனுப்பப்பட்டன.[2] ஆனாலும், பலக்லாமா என்னும் இத் தொப்பியின் பெயர் கிரீமியப் போர்க்காலத்தில் அச்சு மூலங்களில் காணப்படவில்லை. அதற்கு நீண்ட காலத்துக்குப் பின்னர் 1881 ஆம் ஆண்டிலேயே இப்பெயரைக் காணமுடிகிறது.[3] 19 ஆம் நூற்றாண்டில் இவ்வகைத் தொப்பிகளை உகுலான் அல்லது தெம்பிளார்[3] என்னும் பெயர்களாலும் அழைத்தனர். பாரம்பரியமாக இவை கம்பளியினால் செய்யப்பட்டன. இவற்றைக் கீழிருந்து சுருட்டித் தலையின் மேற் பகுதியை மட்டும் மூடும் ஒரு தொப்பி போலவோ[3] அல்லது மேலிருந்து சுருட்டிக் கழுத்தை மட்டும் மூடக்கூடியதாகவோ அணிய முடியும்.[4]
பயன்படும் பொருட்கள்
தொகுதற்காலப் பலக்லாவாக்கள், பல விதமான பொருட்களினால் செய்யப்படுகின்றன. பட்டு, பருத்தி, பாலிப்ரொப்பிலீன், நியோப்பிரீன், கம்பளி, அக்கிரிலிக் என்பன இவற்றுட் சில. நவீன பலக்லாவாக்கள், பனிச்சறுக்கு[5] , குளிர்கால ஈருருளியோட்டம் போன்ற குளிர்காலத் திறந்தவெளி விளையாட்டுக்களின்போது பயன்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Games, Alex (2007). Balderdash & piffle : one sandwich short of a dog's dinner. London: BBC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84607-235-2.
- ↑ Shepherd, John (1991). The Crimean Doctors: A History of the British Medical Services in the Crimean War. Vol. 1. Liverpool University Press. pp. 296–306.
- ↑ 3.0 3.1 3.2 Richard Rutt, A History of Handknitting, London 1987, pages 134–5. (Note that there is a misprint in the date of the Battle of Balaclava, which took place 1854, in the original edition cited here)
- ↑ "Helmet Liner Knitting Pattern - How to Make a Helmet Liner". Knitting.about.com. 2014-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.