வி. விஸ்வநாத மேனன்

வடக்கூட் விஸ்வநாத மேனன் (Vadakkoot Viswanatha Menon) (15 ஜனவரி 1927 [1] – 3 May 2019[2]) இவர் ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஆவார். இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவிலும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

விஸ்வநாத மேனன் கொச்சியில் ஒரு வழக்கறிஞராக இருந்த. நாராயண மேனன் என்பவருக்கும், வடக்கூட் லட்சுமிக்குட்டியம்மா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை - கொச்சினின் புகழ்பெற்ற நாயர் குடும்பத்தின் அம்பாடியைச் சேர்ந்தவர்.

இவர் தனது இளமை பருவத்தில் ஒரு அரசியல் ஆர்வலராக மட்டுமே இருந்தார். எடப்பள்ளி காவல் நிலையம் மீதான பொதுவுடைமை தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டார். இவர், கேரளாவில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தலைவராக இருந்தார். எர்ணாகுளத்தில் தான் படித்த மகாராஜா கல்லூரியில் இந்திய சுதந்திர இயக்கத்தில் மாணவர் ஆர்வலராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது சகோதரர்கள், மூத்தவர்கள் மற்றும் வீட்டின் அருகாமையில் உள்ளவர்களிடையே அம்பாடி விஸ்வம் என்று பிரபலமாக அறிமுகமாகப்பட்டார்.

ஆளும் உயரடுக்கிற்கு எதிரான இவரது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் காரணமாக, கொச்சியில் பிரபலமான இளைஞர் தலைவர்களில் ஒருவராக மேனன் அந்த நேரத்தில் இருந்தார். இவர் தனது மாணவர் நாட்களில் பொதுவுடைமையை நோக்கிச் சென்றார். சிறுவயதிலிருந்தே மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர். இவரைச் சுற்றியுள்ள முக்கிய நபர்களின் செல்வாக்கு காரணமாக, இவரது உறவினர் ஏ.கே.தாமோதரன். இவர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஆவார்.

தொழில்

தொகு

இவர் கொச்சியில் உள்ள பிரியாத இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். மேலும், 1940கள் மற்றும் 1950களின் முற்பகுதியில் காலனித்துவ மற்றும் காலனித்துவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் அதன் தளத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். தனது செல்வாக்குவாந்த குடும்பத்தில் தனது பிரபுத்துவ வாழ்க்கை முறையை தியாகம் செய்த இவர். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சுரண்டலுக்கு எதிராக கட்சி அணிகளில் பணியாற்றினார்.

சாதி அமைப்பானது சிறுபான்மை சாதிகள் ஒருபோதும் சமமாக நடத்தப்படவில்லை. இந்த தீமைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக. இவரை சமூகவுடைமையையும் பின்னர் மக்களாட்சியையும் ஏற்றுக்கொள்ள தூண்டியது.

இந்திய பொதுவுடைமைக் கட்சி மற்றும் பின்னர் இந்திய பொதுவுடைமைக் கட்சி (எம்) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு எ. கி. நாயனார் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் இவர் நிதி அமைச்சராக பணியாற்றினார். ஒருமுறை கேரள சட்டப்பேரவையில் மிக நீண்டவரவு-செலவு உரையை வழங்கிய சாதனையை இவர் வைத்திருந்தார்.

திருவிதாங்கூர், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் இவர் தொழிற்சங்கத் தலைவராக 12 ஆண்டுகளும், இந்தால் நிறுவனத்தில் 14 ஆண்டுகளும் பணியாற்றினார். இவர் ஒரு கொச்சி துறைமுக சங்கத்திற்கும் தலைமை தாங்கினார்.

2000களின் முற்பகுதியில், கட்சி கொள்கைகள் குறித்த கருத்து வேறுபாடு காரணமாக இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியிலிருந்து (எம்) விலகிவிட்டார். 2004 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கிளர்ச்சியாளரான இந்திய பொதுவுடைமைக் கட்சி (எம்) பிளவு குழு ஆகியவற்றின் ஆதரவுடன் இவர் எர்ணாகுளம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு போட்டியிட்டு இவருக்கெதிராக நின்ற டாக்டர் செபாஸ்டியன் பால் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். [3][4]

குறிப்புகள்

தொகு
  1. "Kerala State - Everything about Kerala". www.stateofkerala.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  2. "Former Kerala Finance Minister V Viswanatha Menon passes away". www.telegraphindia.com (in ஆங்கிலம்). 2019-05-03. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  3. Iype, George (5 September 2003). "CPM suffocated me: Viswanatha Menon". rediff.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Viswanatha Menon in the fray". www.thehindu.com. 3 September 2003. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._விஸ்வநாத_மேனன்&oldid=3228418" இலிருந்து மீள்விக்கப்பட்டது