வி. எஸ். அச்சுதானந்தன்

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி

வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் (பிறப்பு - அக்டோபர் 20, 1923) கேரள மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஆவார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்ற உள்ளார். காமரேட் வி எஸ் என்று அழைக்கப்படும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார்.

வி. எஸ். அச்சுதானந்தன்
சட்ட மன்ற உறுப்பினர்
VS at NGO state meet2012 kollam.jpg
2016 தேர்தல் பிரச்சாரத்தில் வி.எஸ். அச்சுதானந்தன்
கேரள நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் 4 வது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 ஆகஸ்ட் 2016
ஆளுநர் ப. சதாசிவம்
முன்னவர் எ. கி. நாயனார்.[1]
11வது கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
18 மே 2006 – 18 மே 2011
ஆளுநர்
  • ஆர். எல். பாட்டியா
  • ஆர். எஸ்.கவாய்
முன்னவர் உம்மன் சாண்டி
பின்வந்தவர் உம்மன் சாண்டி
தொகுதி மலம்புழா
கேரள சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர்
பதவியில்
18 மே 2011 – 24 மே 2016
முன்னவர் உம்மன் சாண்டி
பின்வந்தவர் ரமேஷ் சென்னிதலா
தொகுதி மலம்புழா
பதவியில்
17 மே 2001 – 12 மே 2006
முன்னவர் அ. கு. ஆன்டனி
பின்வந்தவர் உம்மன் சாண்டி
தொகுதி மலம்புழா
பதவியில்
1992 – 9 மே 1996
முன்னவர் எ. கி. நாயனார்
பின்வந்தவர் அ. கு. ஆன்டனி
தொகுதி மலம்புழா
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் கேரள மாநிலக் குழுவின் செயலாளர்
பதவியில்
1980–1992
முன்னவர் எ. கி. நாயனார்
பின்வந்தவர் எ. கி. நாயனார்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
பதவியில்
29 திசம்பர் 1985 – 12 ஜுன் 2009
தனிநபர் தகவல்
பிறப்பு வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன்
20 அக்டோபர் 1923 (1923-10-20) (அகவை 99)
ஆலப்புழா, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(கேரளம், இந்தியா)
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) CPI-M-flag.svg
வாழ்க்கை துணைவர்(கள்) கே.வசுமதி (16 ஜூலை 1967)
பிள்ளைகள் டாக்டர் வி. ஏ.அருண்குமார்
டாக்டர். வி.வி.ஆஷா
இருப்பிடம் புன்னபிரா வடக்கு, கேரளம் திருவனந்தபுரம்
இணையம் www.vsachuthanandan.in
அச்சுதானந்தன்

இளமைப் பருவம்தொகு

கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும் தந்தையைப் பதினொரு வயதிலும் இழந்த அவர், தனது ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு கயிறுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

அரசியல் வாழ்க்கைதொகு

தொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், 1938ஆம் ஆண்டு மாநில கங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு அளித்த அவர், ஐந்து வருடத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். 12 ஜூலை 2009 அன்று நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சி தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.[2]

2011-ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதின்மூன்றாவது சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனார். இவர் மலம்புழா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "3rd Kerala ARC".
  2. "பொலிட்பீரோ பதவியிலிருந்து கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் அதிரடி நீக்கம்". தினத்தந்தி. 13 Jul 2009. http://www.dailythanthi.com/article.asp?NewsID=500228&disdate=7/13/2009&advt=1. பார்த்த நாள்: 13 Jul 2009. 
  3. சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
முன்னர்
வி. எஸ். அச்சுதானந்தன்
கேரளமுதலமைச்சர்
2006 - 2011
பின்னர்
உம்மன் சாண்டி


ரமேஷ் சென்னிதலா