கே. கருணாகரன்

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி

கண்ணோத்து கருணாகரன் மாரார், சுருக்கமாக கே. கருணாகரன், (K Karunakaran, மலையாளம்:കെ. കരുണാകരന്) (பிறப்பு சூலை 5, 1918 - இறப்பு. டிசம்பர் 23 2010) இந்திய மாநிலம் கேரளத்தைச் சேர்ந்த ஓர் மூத்த காங்கிரசுத் தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சரும் ஆவார். கேரள மாநில உள்துறை அமைச்சராகவும் நடுவண் அரசில் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து பலமுறை சிறை சென்றுள்ள கருணாகரன் காங்கிரசின் பல தொழிலாளர் சங்கங்களிலும் தலைவராக இருந்துள்ளார். கேரள காங்கிரசு வட்டங்களில் அன்புடன் "தலைவர்" என்று அழைக்கப்படுபவர். தனது குடும்பத்தினருக்காக தனிச்சலுகை காட்டுவதாகவும் வாரிசு அரசியலை வளர்த்தெடுப்பதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.ஏ. கே. அந்தோணி முதல்வராக இருந்தபோது கட்சிக்கு எதிராக செயல்பட்டு கட்சித் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைகளை ஏற்காது கட்சியிலிருந்து பிரிந்து "சனநாயக இந்திரா காங்கிரசு (கருணாகரன்)" என்ற தனிக்கட்சி துவங்கினார். பின்பு இந்திய தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

கண்ணோத்து கருணாகரன்
കെ. കരുണാകരന്‍
முன்னாள் கேரள முதலமைச்சர்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 5, 1918(1918-07-05)
கண்ணூர், கேரளம்
இறப்பு டிசம்பர் 23, 2010
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கல்யாணிக்குட்டி அம்மா (மறைந்தவர்)
பிள்ளைகள் கே. முரளிதரன் மற்றும் பத்மஜா வேணுகோபால்
இருப்பிடம் திருச்சூர்
சமயம் இந்து

இளமைEdit

1918ஆம் ஆண்டு சூலை 5 அன்று ராமுண்ணி மாராருக்கும் கல்யாணி அம்மாளுக்கும் மகனாக கண்ணூரில் பிறந்தார். இராசாவின் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேசன் படித்து திருச்சூர் கலைக் கல்லூரியில் இலக்கியமும் கணிதமும் பயின்றார்.

அரசியல் வாழ்வுEdit

இளமைக் காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். கொச்சி பிரஜா மண்டலம் என்ற கட்சி தொண்டராக தொடங்கி திருச்சூர் நகராட்சி மன்ற உறுப்பினராக 1945 முதல் 1947 வரை பணியாற்றினார். 1952-53 காலத்தில் அமைந்த திருவாங்கூர்-கொச்சி சட்டப்பேரவையில் இந்திய தேசிய காங்கிரசின் பேரவை கட்சிக்கொறடாவாக பணியாற்றினார். காங்கிரசின் பேரவை கட்சித்தலைவராக நீண்ட காலம், 1967 முதல் 1995 வரை, இருந்த பெருமை இவருக்குண்டு. மையத்திலும் காங்கிரசு கட்சியின் செயற்குழுவில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தார். சவகர்லால் நேரு குடும்பத்துடன், முக்கியமாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். ராஜீவின் மறைவிற்குப் பிறகு பிரதமராகத் தகுந்தவரை பரிந்துரைப்பதில் இவரது பங்கு மிகுதியாக உண்டு.

நான்குமுறை (1977,1981-82,1982-87 & 1991-95) கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கேரளத்தின் மிகவும் சர்ச்சைக்குட்பட்ட தலைவராக கருணாகரன் விளங்கினார். முதன்முறையாக மார்ச்சு 1977 அன்று பதவியேற்ற கருணாகரன் முந்தைய, நெருக்கடி காலத்தில், சி. அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது எழுந்த "இராசன் கொலை வழக்கில்" நீதிமன்றத்தின் குறைசுட்டும் குறிப்புகளையொட்டி ஏப்ரல் 1977ஆம் ஆண்டு பதவி விலகினார்.

மேற்கோள்கள்Edit

வெளியிணைப்புகள்Edit

அரசியல் பதவிகள்
முன்னர்
C. Achutha Menon
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1977
பின்னர்
அ. கு. ஆன்டனி
முன்னர்
எ. கி. நாயனார்
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1981–1987
பின்னர்
எ. கி. நாயனார்
முன்னர்
எ. கி. நாயனார்
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1991–1995
பின்னர்
அ. கு. ஆன்டனி