திருவாங்கூர் இராதாகிருஷ்ணன்
திருவாங்கூர் இராதாகிருஷ்ணன் (Thiruvanchoor Radhakrishnan) (பிறப்பு 26 டிசம்பர் 1949) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார்.[1] 2012 ஏப்ரல் 13 முதல் 2014 ஜனவரி 1 வரை கேரள அரசின், உம்மன் சாண்டி அமைச்சகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார்.[2] இவர் ஒரே நேரத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையையும் கவனித்து வந்தார். பின்னர் வனத்துறை, போக்குவரத்து, விளையாட்டு, திரைத்துறை, சுற்றுச்சூழல் துறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.[3]
திருவாங்கூர் இராதாகிருஷ்ணன் തിരുവഞ്ചൂർ രാധാകൃഷ്ണൻ | |
---|---|
![]() | |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1 சூன் 2011 | |
ஆளுநர் | |
Chief Minister | உம்மன் சாண்டி பிணறாயி விஜயன் |
முன்னவர் | வி. என். வாசவன் |
தொகுதி | கோட்டயம் |
உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைச்சகத்தில் வனம், போக்குவரத்து, திரைத் துறைகளின் அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் 1 சனவரி 2014 – 20 மே 2016 | |
ஆளுநர் |
|
முதலமைச்சர் | உம்மன் சாண்டி |
முன்னவர் | ஆர்யாதன் முகமது |
பின்வந்தவர் | ஏ. கே. சசீந்திரன் |
உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைச்சகத்தில் உள்துறை, இலஞ்ச ஒழிப்பு, தீ மற்றும் வளங்கள் துறைகளைன் அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் 12 ஏப்ரல் 2012 – 31 திசம்பர் 2013 | |
ஆளுநர் |
|
முதலமைச்சர் | உம்மன் சாண்டி |
முன்னவர் | உம்மன் சாண்டி |
பின்வந்தவர் | ரமேஷ் சென்னிதலா |
உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைச்சகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் | |
பதவியில் 23 மே 2011 – 11 ஏப்ரல் 2012 | |
ஆளுநர் |
|
முதலமைச்சர் | உம்மன் சாண்டி |
முன்னவர் | கே. பி. ராஜேந்திரன் |
பின்வந்தவர் | அடூர் பிரகாஸ் |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991 – 2011 | |
ஆளுநர் |
|
முதலமைச்சர் | கே. கருணாகரன் அ. கு. ஆன்டனி எ. கி. நாயனார் உம்மன் சாண்டி வி. எஸ். அச்சுதானந்தன் |
முன்னவர் | ஆர். உன்னிகிருஷ்ணன் பிள்ளை |
பின்வந்தவர் | சித்தாயம் கோபகுமார் |
தொகுதி | அடூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 26 திசம்பர் 1949 திருவாங்கூர், திருவாங்கூர் கொச்சி மாநிலம், இந்திய ஒன்றியம் (தற்போது கோட்டயம், கேரளம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | இலலிதாம்பிகா |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் |
|
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம் |
சொந்த வாழ்க்கை தொகு
இராதாகிருஷ்ணன், கே. பி பரமேஸ்வரன் பிள்ளை - எம். ஜி.கௌரிகுட்டி ஆகியோருக்கு 26 திசம்பர் 1949 அன்று திருவாங்கூர்-கொச்சியில் பிறந்தார். திருவனந்தபுரம், அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பெற்ற இவர் கோட்டயத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இவர் இலலிதாம்பிகா என்பவரை மணந்தார். இவர்களுக்கு மருத்துவர் அனுபம், அர்ஜுன் என்ற இரண்டு மகன்களும், ஆதிரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை தொகு
திருவாங்கூரில் மாணவர் ஆர்வலராக பொது சேவையில் நுழைந்தார். பாலஜனசாக்யம், கேரள மாணவர் ஒன்றியம், இளைஞர் காங்கிரஸ் மூலம், பல்வேறு இளைஞர் அமைப்புகளின் தலைவராக உயர்ந்தார்.
இவர், அடூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1991, 1996, 2001, 2006இல் கேரளா சட்டமன்றத்துக்குத் தேர்தெடுக்கப்பட்டார். தற்போது கோட்டயம் சட்டமன்றத் தொகுதியை பிரநிதித்துவப் படுத்துகிறார். இவர் கேரள பிரதேச காங்கிரசு கமிட்டியின் (ஐ) பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
முக்கிய தேர்தல் வெற்றிகள் | |||
---|---|---|---|
ஆண்டு | தொகுதி | நெருங்கிய போட்டியாளர் | பெரும்பான்மை (வாக்குகள்) |
1991 | அடூர் | ஆர் உன்னிகிருஷ்ண பிள்ளை ( இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) ) |
5,767 [4] |
1996 | அடூர் | கே. என். பாலகோபால் ( இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) ) |
9,201 [5] |
2001 | அடூர் | கடம்மினித்த ராமகிருஷ்ணன் ( இடதுசாரி ஜனநாயக முன்னணி ) |
14,050 [6] |
2006 | அடூர் | டி.கே.ஜான் ( கேரள காங்கிரஸ் ) | 18,464 [7] |
2011 | கோட்டயம் | VN வாசவன் ( இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) ) |
711 [8] |
2016 | கோட்டயம் | ரெஜி சக்காரியா ( இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) ) |
33,632 [9] |
மேற்கோள்கள் தொகு
- ↑ [1]Niyamasabha site ()
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-in-school/article3308810.ece
- ↑ [2] Kerala Government Official Website
- ↑ http://ceo.kerala.gov.in/pdf/KLA/KL_1991_ST_REP.pdf
- ↑ http://ceo.kerala.gov.in/pdf/KLA/KL_1996_ST_REP.pdf
- ↑ http://ceo.kerala.gov.in/pdf/KLA/KL_2001_ST_REP.pdf
- ↑ http://ceo.kerala.gov.in/pdf/KLA/KL_2006_ST_REP.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120423215242/http://www.ceo.kerala.gov.in/pdf/LAC-2011-RESULTS/097B.pdf.
- ↑ http://www.thehindu.com/news/national/kerala/status-quo-in-kottayam-district-as-parties-hold-on-to-sitting-seats/article8623352.ece