சித்தாயம் கோபகுமார்

இந்திய அரசியல்வாதி

சித்தாயம் கோபகுமார் (Chittayam Gopakumar) பிறப்பு 30 மே 1965) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011இல் முதன்முறையாக கேரள சட்டமன்றத்திற்கு பத்தனம்திட்டா மாவட்டத்தில் அடூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016இல் நடடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியிலிருந்து இவர் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் கேரள சட்டமன்றத்தின் தற்போதைய துணை சபாநாயகராக இருக்கிறார்.

சித்தாயம் கோபகுமார்
துணை சபாநாயகர், கேரள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2021 (2021-06-01)
முன்னையவர்வே. சசி
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2011 (2011-06-01)
முன்னையவர்திருவாங்கூர் இராதாகிருஷ்ணன்
தொகுதிஅடூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1965 (1965-05-30) (அகவை 59)
கொட்டாரக்கரை, கொல்லம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்சி. செர்லி பாய்
பிள்ளைகள்2
வாழிடம்(s)கொட்டாரக்கரை, கொல்லம்

இவர், 2019இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவில் மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியிலிருந்து இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷிடம் தோற்றார் .

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் 30 மே 1965இல், கொல்லம் மாவட்டத்திலுள்ள சித்தாயத்தில் டி. கோபாலகிருஷ்ணன் - டி. கே. தேவயானி ஆகியோரின் மகனாக பிறந்தார். இவர் கொட்டாரக்கரை புனித கிரிகோரியோசு கல்லூரியில் முன் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் தனது குடும்பத்தின் மோசமான நிதி நிலைமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இவர், சி. செர்லி பாய் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். [1]

அரசியல் வாழ்க்கை

தொகு

கோபகுமார், தனது பள்ளி நாட்களில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் அரசியலில் நுழைந்து, அந்த அமைப்பின் மாநில குழு உறுப்பினரானார். பின்னர் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசில் சேர்ந்து, தொழிற்சங்க இயக்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கினார். பின்னர் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் மாநில செயற்குழு உறுப்பினரானார். இவர் கேரள காசுவண்டி தொழிலாளி கேந்திர அமைப்பின் மாநில செயலாளராகவும் (கேரளா முந்திரி தொழிலாளர்கள் மத்திய தொழிற்சங்கம்), ஆஷா தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும், கேரள மாநில கர்ஷகா தொழிலாளி கூட்டமைப்பின் கொல்லம் மாவட்ட தலைவராகவும் இருந்தார். 18 வயதில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கிளைக் குழு உறுப்பினராக சேர்ந்தார். இப்போது அக்கட்சியின் மாநில அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார்.[2]

2011இல், கட்சி இவரை கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான அடூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியது. இவர் காங்கிரசு வேட்பாளர் பந்தளம் சுதாகரனை 607 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில், இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் குறித்த குழுவின் தலைவரானார். 2016ஆம் ஆண்டில், மீண்டும் அதே தொகுதியிலிருந்து 25,460 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காங்கிரசு வேட்பாளர் கே கே ஷாஜுவை தோற்கடித்தார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில், இவர் மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரசு வேட்பாளரும் தொகுதியின் அப்போதைய உறுப்பினருமான கொடிக்குன்னில் சுரேஷிடம் 61,138 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2021 கேரள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசு வேட்பாளர் எம். ஜி. கண்ணனை 2919 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் அடூர் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாயம்_கோபகுமார்&oldid=3728598" இலிருந்து மீள்விக்கப்பட்டது