பந்தளம் சுகுமாரன்
பந்தளம் சுதாகரன் (Pandalam Sudhakaran) (பிறப்பு 22 நவம்பர் 1955, பந்தளம், கேரளா, இந்தியா) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். வாண்டூர் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சி வேட்பாளராக 1982இல் முதல் முறையாக கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1982, '87 , '91இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பந்தளம் சுதாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 நவம்பர் 1955 பந்தளம் |
துணைவர் | அஜிதா |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவர் அஜிதா என்பவரை மணந்தார் . இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வகித்த அரசியல் பதவிகள்
தொகு- 1978-1982 கேரள மாணவர் ஒன்றியத்தின் துணைத் தலைவர், பொதுச் செயலாளர்.
- 1982-1989 இளைஞர் காங்கிரசின் துணைத் தலைவர்,[1] பொதுச் செயலாளர்
- 1982-1996 கேரள சட்டமன்ற உறுப்பினர் (வாண்டூர்)
- 1989–1992 இளைஞர் காங்கிரசின் மாநில தலைவர்.[2]
- 1987-1991 கொறடா, காங்கிரசு சட்டமன்ற கட்சி
- 1991-1996 பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினருக்கான அமைச்சர்.[3] Sports[4] பிற்படுத்தப்பட்ட சமூகம், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினருக்கான துறை அமைச்சர் அ. கு. ஆன்டனி அரசு
இவர் காந்திஜி பல்கலைக்கழக ஆட்சிக் குழு, காலிகட் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை, கேரள பிரதேச காங்கிரசு குழு நிர்வாகி, திருவனந்தபுரம் தூர்தர்ஷன் கேந்திரா ஆலோசனை வாரிய உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கேரள மாநில திரைப்பட விருது குழுவில் நடுவர் உறுப்பினராக இருந்தார். மேலும், கேரள மாநிலத் திரைப்பட மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். கேரள பிரதேச காங்கிரசு குழுவின் பொதுச் செயலாளர்,[5] கேரளா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர், [6] ஜெய்ஹிந்த் தொலைக்கட்சியின் இயக்குனர்,[7] மலையாளத் திரையுலக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், கேரளா கலாமண்டலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள பிரதேச காங்கிரசு குழு செய்தித் தொடர்பாளர் (2013 முதல் ) போன்ற பதவிகளையும் வகித்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "India Today Online". இந்தியா டுடே 13 (23): 41. 1988. பன்னாட்டுத் தர தொடர் எண்:0254-8399.
- ↑ 1991 electoral politics, sectarian or dynastic, Volume 1. 1991.
- ↑ Documentation on women & violence, Volume 3. Streevani. இணையக் கணினி நூலக மைய எண் 489437296.
- ↑ "Antony-Karunakaran burry the hutchet [sic]". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 March 2004 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104205553/http://articles.timesofindia.indiatimes.com/2004-03-16/thiruvananthapuram/28338083_1_antony-and-k-karunakaran-mukundapuram-rajya-sabha. பார்த்த நாள்: 19 February 2011.
- ↑ "CPI(M) trying to create communal divide: KPCC". தி இந்து. 11 October 2010 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629023703/http://www.hindu.com/2010/10/11/stories/2010101152260300.htm. பார்த்த நாள்: 19 February 2011.
- ↑ . 13 March 2005.
- ↑ "Withdraw suspensions: Karunakaran". தி இந்து. 13 March 2005 இம் மூலத்தில் இருந்து 10 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090210234917/http://hindu.com/2005/03/13/stories/2005031311870600.htm. பார்த்த நாள்: 19 February 2011.