கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ( Kerala Tourism Development Corporation ) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் சுற்றுலா செயல்பாடுகளை வளர்த்து ஒழுங்குபடுத்தும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும் . கே.சு.மே.க திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டும், கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மாநிலத்தின் முக்கிய இடங்களில் உணவகங்கள், குடில்கள், சுற்றுலா ஓய்வு இல்லங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதன் உத்தியோகபூர்வ முழக்கம் "Official host to God's own country". இது கேரள அரசின் மிகவும் இலாபகரமான தொழில் முயற்சிகளில் ஒன்றாகும். [ மேற்கோள் தேவை ]
வகை | கேரள அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1 நவம்பர் 1966 |
தலைமையகம் | இந்தியா, கேரளம், திருவனந்தபுரம் |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா, கேரளம் |
முதன்மை நபர்கள் | எம். விஜயகுமார் (தலைவர்) ஆர்.இராகுல் (செயல் இயக்குநர்) |
தொழில்துறை | சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, விடுதி மேலாண்மை |
இணையத்தளம் | keralatourism.org |
வரலாறு
தொகு1960 களின் முற்பகுதி வரை சுற்றுலாத் துறைகளில் கேரளம் ஒப்பீட்டளவில் அறியப்படாத மாநிலமாக இருந்தது. கேரளத்தை ஒரு சுற்றுலாத் தலமாக பிரபலப்படுத்துவதற்கான முதல் முயற்சியை திருவிதாங்கூரின் இளவரசர் கன்சோர்ட் ஜி. வி. ராஜா மேற்கொண்டார். கோதவர்மா ராஜா (அப்போதைய திருவிதாங்கூர் இராணியின் கணவர்) திருவாங்கூர் இராச்சியத்தின் முக்கியச் சுற்றுலா இடங்களைப் பிரபலப்படுத்த கேரள டூர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். திருவிதாங்கூர் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தபோது, கேரளா டூர்ஸ் லிமிடெட் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனமாக மாறியது. விடுதலைப் பெற்ற 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சுற்றுலாவை ஒரு முக்கிய தொழில் என்று ஏற்காமல் புறக்கணிக்கும் கேரளத்தின் போக்கு, கே.டி.எல் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் இந்த பணியை வழிநடத்தும்படி விட்டுவிட்டது. 1960 களில், தாமஸ் குக்கின் ஒத்துழைப்பதன் மூலம் கே.டி.எல் செயல்பட்டது மேலும் கோவளத்தை மேற்கத்திய நாடுகளில் பிரபலப்படுத்தத் தொடங்கியது, இது கோவளம் கடற்கரைக்கு ஹிப்பி கலாச்சாரத் தாக்கம் கொண்டவர்களின் வருகையைத் துவக்ககிவைத்தது. கோவலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வருகை, சுற்றுலாவை ஒரு முக்கிய தொழிலாக கேரள அரசை கருத வைத்ததது. கேரள டூர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தேசியமயமாக்க முயன்ற போதிலும், அது விரைவில் சட்ட சிக்கல்களில் சிக்கியது. இதன் விளைவாக 1966 ஆம் ஆண்டில் கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) என்று அழைக்கப்படும் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து அரசாங்கம் சிந்தித்தது. [1]
அரசாங்கத் துறையாகத் தொடங்கப்பட்ட கே.சு.மே.க 1970 களில் ஒரு தனி வணிக நிறுவனமாக மாறியது. கேரள அரசின் பல விருந்தினர் இல்லங்கள் அடையாளம் காணப்பட்டு விடுதி வணிகச் சின்னங்ங்காள மாற்றப்பட்டன. லெப்டினன்ட் கேணல். ஜி. வி. ராஜா கேரள சுற்றுலா மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். கோவளத்தை சர்வதேச சுற்றுலா தலமாக வளர்ப்பதில் முக்கிய வடிவமைப்புக் கலைஞராக இருந்தார். [2]
குறிக்கோள்கள்
தொகு- கேரளாவை ஒரு முன்னணி சுற்றுலா தலமாக தூண்டுகோளாக இருத்தல்
- கேரளத்திற்குள் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை அடையாளம் கண்டு வெளியுலகத்திற்கு அறிமுகப்பட்டுத்துதல்
- முக்கிய சுற்றுலா தலங்களை வளர்ப்பதில் துணையாக இருத்தல்
- சுற்றுலாப் பயணிகளுக்கு மிக உயர்ந்த தரமான விருந்தோம்பல் சேவைகளை வழங்குதல்
- சுற்றுலா தலங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் தொடர்பான விசயங்களுக்கு ஒரு மூல இடமாக செயல்படுவது.
- நிதி மற்றும் சாத்தியமான திட்டங்கள் மூலம் அரசாங்கத்திற்கு அதிக வருவாயை உறுதி செய்வதும், அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்ககுவதும்
பண்புகள்
தொகுபாரம்பரிய ஐந்து நட்சத்திர குடில்கள் முதல் சிக்கன தங்குமிடம் வரையிலான 40 க்கும் மேற்பட்ட சொத்துக்களை கே.சு.மே.க கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "GODAVARMA RAJA (COLONEL) : IMPORTANT PERSONALITIES :". keralawindow.net. keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
- ↑ "G. V. Raja Convention Centre". பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.