வே. சசி

இந்திய அரசியல்வாதி

வே. சசி (ஆங்கிலம்: V. Sasi; மலையாளம்: വി. ശശി) என்பவர் 13வது கேரள சட்டமன்றம் மற்றும் 14வது கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை கேரள சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இருந்தார்.[1] இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்ந்தவர். இவர் சிறயின்கீழ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஏ. வேலு மற்றும் கே.சாரதா தம்பதியருக்கு மகனாக, சசி 1950 மே 12 அன்று பிறந்தார். பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர். இவருக்கு சுமா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Profiles Handbook – Legislative Bodies In India" (PDF). legislativebodiesinindia.nic.in.
  2. "Deputy Speaker's Page - Kerala Legislature".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._சசி&oldid=3728600" இலிருந்து மீள்விக்கப்பட்டது