ஏ. கே. சசீந்திரன்
ஏ.கே.சசீந்திரன் (A. K. Saseendran) (பிறப்பு 29 ஜனவரி 1946) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பிணறாயி விஜயனின் இரண்டாவது அமைச்சகத்தில் கேரள அரசின் [1] [2] அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். மேலும் எலத்தூர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் முன்பு 1980, 1982, 2006, 2011, 2016 இல் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏ. கே. சசீந்திரன் | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2021 | |
கேரள அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சர் | |
பதவியில் 1 பெப்ரவரி 2018 – 03 மே 2021 | |
முன்னையவர் | தாமஸ் சாண்டி |
பின்னவர் | ஆண்டனி ராஜூ |
பதவியில் 25 மே 2016 – 26 மார்ச்சு 2017 | |
முன்னையவர் | திருவாங்கூர் இராதாகிருஷ்ணன் |
பின்னவர் | தாமஸ் சாண்டி |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சூன் 2011 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
தொகுதி | எலத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 சனவரி 1946 கண்ணூர், மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கேரளம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
துணைவர் | அனிதா கிருஷ்ணன் என். டி. |
பிள்ளைகள் | வருண் சசீந்திரன் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | கண்ணூர் தெற்கு, கண்ணூர் |
மூலம்: [கேரள அரசில் வனத்துறை, வன விலங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்] |
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் கே.குன்ஹாம்பு-கே.ஜானகி ஆகியோரின் மகனாக 29 ஜனவரி 1946 இல் கண்ணூரில் பிறந்தார். இவர் அனிதா கிருஷ்ணன் என். டி. என்பவரை மணந்தார். இவர்களுக்கும் வருண் சசீந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கண்ணூர் மெலே சோவ்வாவில் (கண்ணூர் தெற்கு) வசிக்கிறார்.
அரசியல் வாழ்க்கை
தொகுவருடம் | தொகுதி | எதிர்த்துப் போட்டியிட்டவர் | பெரும்பான்மை
(வாக்குகள்) |
வெற்றி/தோல்வி |
---|---|---|---|---|
1980 | பெரிங்காலம் | கே. சி. மாரார் (ஜேஎன்பி) | 5890 | வெற்றி[3] |
1982 | எடக்காடு | கே. சுதாகரன் (ஜனதா-ஜி) | 7543 | வெற்றி[4] |
1987 | கண்ணூர் | பி. பாஸ்கரன் ( இந்திய தேசிய காங்கிரசு ) | 8048 | தோல்வி[5] |
1991 | கண்ணூர் | என். இராமகிருஷ்ணன் (காங்கிரசு) | 14805 | தோல்வி[6] |
2006 | பாலுசேரி | கே. பாலகிருஷ்ணன் கிடாவு (காங்கிரசு) | 14160 | வெற்றி[7] |
2011 | எலத்தூர் | சேக் பி ஹாரிசு (எஸ்ஜேடி) | 14654 | வெற்றி[8] |
2016 | எலத்தூர் | கிஷான் சந்த் (ஜேடி(யு)) | 29057 | வெற்றி[9] |
2021 | எலத்தூர் | சுல்பிகர் மயூரி (சுயேட்சை) | 38502 | வெற்றி[10] |
சர்ச்சை
தொகு26 மார்ச் 2017 அன்று, புதிதாக தொடங்கப்பட்ட மலையாள தொலைக்காட்சி நிறுவனமான மங்கலம் தொலைக்காட்சியின் "இல்லத்தரசி" என்ற நிகழ்ச்சியில் சசீந்திரன் தோன்றிய போது தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார். அதில் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக வெளிப்படையாக பேசியதாகக் கூறப்பட்டது.[11] [12] [13]
பின்னர், நிர்வாகத்தின் முதன்மை செயல் அலுவலர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.[14] பெண் பத்திரிகையாளரை பயன்படுத்தி தங்கள் நடத்திய இரகசிய நடவடிக்கை என்று ஒப்புக்கொண்டார்.[15]
ஏப்ரல் 4 அன்று, " ஆபாச உரையாடல்" மற்றும் குற்றச் சதியை ஒளிபரப்பியதற்காக, தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியும், நான்கு ஊடகவியலாளர்களும் கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.[16] [17]
பின்னர், பாலியல் துன்புறுத்தல் என்று குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் சசீந்திரன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[18] [19] பிணறாயி விஜயன் அமைச்சரவையிலிருந்து பதவி விலகிய இரண்டாவது அமைச்சர் சசீந்திரன் ஆவார்.[20]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
- ↑ "Notifications - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2021-05-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
- ↑ "Kerala Assembly Election Results in 1980". www.elections.in. Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Kerala Assembly Election Results 1982: EDAKKAD- A. K. Saseendran". www.keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Kerala Assembly Election Results in 1987". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Kerala Assembly Election Results in 1991". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Kerala Assembly Election Results in 2006". www.elections.in. Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Kerala Assembly Election Results in 2011". www.elections.in. Archived from the original on 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Kerala Assembly Election Results in 2016". www.elections.in. Archived from the original on 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-19.
- ↑ "Minister A K Saseendran phone talk Mangalam tv exclusive launching YouTube 360p - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "Kerala minister AK Saseendran quits over alleged obscene phone call with woman". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-03-26. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "Kerala sleaze audio case: Mangalam TV channel CEO, 4 others arrested". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "Mangalam TV CEO apologises for sting against former minister". The Indian Express (in ஆங்கிலம்). 2017-03-31. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "'Will you stop journalism if HONEY TRAP proved'?; Mangalam CEO tongue tied in Editors Hour - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "Kerala sleaze audio case: Mangalam TV channel CEO, 4 others arrested". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ Legal, India (2017-04-11). "Trouble in store for Mangalam TV". India Legal (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-22. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "NCP's AK Saseendran acquitted; set to return to Kerala state cabinet". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "After acquittal in sleaze talk case, AK Saseendran returns to Kerala cabinet". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
- ↑ "Kerala Transport Minister Saseendran quits after TV exposé". http://www.thehindu.com/news/national/kerala/kerala-transport-minister-resigns/article17667134.ece?homepage=true.