பாலுசேரி

கேரளாவில் உள்ள நகரம்

பாலுசேரி (Balussery ) என்னும் ஊர், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது கோழிக்கோடு நகரத்தில் இருந்து 26 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ளது. ராமாயணத்தில் பாலி இங்குதான் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இங்கே பாலி தவம் செய்ததனால் பாலுசேரி என்ற பெயர் வந்ததாகக் கருதுகின்றனர்.

பாலுசேரி
வைகுண்டம் விஷ்னு ஆலயம்
வைகுண்டம் விஷ்னு ஆலயம்
ஆள்கூறுகள்: 11°27′N 75°50′E / 11.45°N 75.83°E / 11.45; 75.83
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
இந்தியாவில் உள்ள மாவட்டங்கள்கோழிக்கோடு மாவட்டம்
ஏற்றம்
42 m (138 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்2,12,592
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
673612
தொலைபேசி91 496
வாகனப் பதிவுKL-11, KL-56, KL-57,
இணையதளம்http://www.balusseri.com

இது கொயிலாண்டி- தாமரசேரி- எடவண்ணை மாநில நெடுஞ்சாலையில் இருக்கின்றது.

புவியியல் மற்றும் காலநிலை

தொகு

பாலுசேரியின் அமைவிடம் 11°27′N 75°50′E / 11.45°N 75.83°E / 11.45; 75.83 [1]. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 42 மீ (138 அடி) உயரத்தில் உள்ளது. கோடைகால சராசரி வெப்பநிலை 30 முதல் 36 டிகிரி செல்சியசு வரை இருக்கும், மாரிகாலங்களில் 24 டிகிரி செல்சியசு வரை இருக்கும்.

மீள் பார்வை

தொகு

பாலுசேரி தேர்தல் தொகுதியானது 278.54 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, இந்தத் தொகுதியில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை அதோலி, பாலுசேரி, கூரச்சுந்து, கூட்டூர், நடுவன்னூர், பனங்காடு, உள்ளியெரி மற்றும் உன்னிகுளம். இதன் மொத்த மக்கள் தொகை 212,592 ஆகும். இதில் ஆண்கள் 105,962, பெண்கள் 106,631.

அரசு அலுவலகங்கள் இந்த நகரத்தின் மையப் பகுதிகளில் அமைந்துள்ளன.கேரளத்தின் 33 வாட்டு (அலகு) கொண்ட மின்சார வாரியம் இங்கு உள்ளது. மேலும் வேலை வாய்ப்பு அலுவலகம் பாலு சேரி முக்கு எனுமிடத்திலும், கேரள சரக காவல் அலுவலகம், உதவிப் பதிவுத் துறை அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், ஆறு கூட்டுறவுச் சங்கங்கள், திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகியவை இந்த நகரத்தில் அமைந்துள்ளது.

கோழிக்கோடு, கொயிலாண்டி, கூரச்சுந்து, கொட்டாலிடா, மற்றும் பெரம்பிரா ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்து வசதிகள் உள்ளன. பாலுசேரியின் நகரப்பகுதியில் இருந்து பின்னிலம் சார்ந்த பகுதிகளுக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் மலைப்பிரதேசப் பகுதிகளான மங்கயம், கூரச்சுந்து, காக்கயம்,சீக்கிலோடு, வயலடா போன்ற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கல்வி

தொகு

பாலுசேரியில்பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி, கொக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பாலுசேரி ஜிஎல்பி பள்ளி,ஏ. எல். பி பள்ளி ஆகிய முழுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன.

ஆதர்சா சமஸ்கிருத வித்யா பீடம் எனும் மத்திய கல்வி நிறுவனம் வைகுண்டத்தில் உள்ளது. கேராளாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும்.

அரசியல்

தொகு

பாலுசேரி சட்டமன்றத் தொகுதியானது கோழிக்கோடு மக்களவைத் தொகுதியில் உள்ளது.[2] கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் ஏ. சி. சண்முகதாஸ் இருபத்தி ஐந்து ஆண்டுகள் சட்ட மன்ற உறுப்பினராக (இந்தியா) இருந்துள்ளார்.

போக்குவரத்து

தொகு

கோழிக்கோட்டில் இருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொயிலாண்டி, கோழிக்கோடு ஆகிய தொடருந்து நிலையங்களின் மூலம் பிற ஊர்களுக்குச் செல்லலாம்.

கோவில்கள்

தொகு

வேட்டக்கொருமகன் கோயில் பேருந்துநிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் குன்னத்தரு மகா கணபதி கோயில், பொன்னாரம் தெரு மகா கணபதி கோயில், சாமுண்டீஷ்வரி கோயில், வைகுந்தம் விஷ்ணு கோயில், சிந்திராமங்கலம் ஸ்ரீ கிருஷ்ண கோயில், மூகாம்பிகை கோயில் மற்றும் நரசிம்ம சேத்ரம் நிர்மலூர் போன்ற சிறிய கோயில்களும் அருகாமையில் உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Balussheri[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 30 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.

வெளியிணைப்புகள்

தொகு

பாலுசேரி.காம் பரணிடப்பட்டது 2012-05-14 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலுசேரி&oldid=3587543" இலிருந்து மீள்விக்கப்பட்டது