பஞ்சாப் தேசிய வங்கி

இந்தியப் பொதுத்துறை வங்கி

பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது 1894 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி, இந்தியாவின் 764 நகரங்களில், 6,300-க்கும் அதிகமான கிளைகளையும், 7,900-க்கும் அதிகமான ஏடிஎம் எனப்படும் தாவருவிகளையும் கொண்டுள்ளது. இவ்வங்கி இந்தியா முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.[3]

பஞ்சாப் தேசிய வங்கி
வகைபொதுத்துறை வஙகி
நிறுவுகை19 மே 1894 [1][2]
நிறுவனர்(கள்)லாலா லஜபதி ராய்
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
முதன்மை நபர்கள்கௌரி சங்கர்
(நிர்வாக இயக்குநர், மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில், நிதிச் சேவைகள்
உற்பத்திகள்கடன் அட்டைகள்,
நுகர்வோர் வங்கி,
வணிக வங்கி,
நிதி மற்றும் காப்பீடு,
முதலீட்டு வங்கி,
அடமான கடன்கள்,
தனிநபர் வங்கி,
தனியார் சமபங்கு,
வள மேலாண்மை
வருமானம் 47,400 கோடிகள் (2013)[3][4]
நிகர வருமானம் INR 49.54 பில்லியன் (மில்லியன்) (2013)[3][4]
மொத்தச் சொத்துகள் ( பில்லியன்) (2013)[3][4]
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்62,392 (March 2013)[3]
இணையத்தளம்www.pnbindia.in

இந்தியாவில் செயல்பட்டுவரும் வரும் நான்கு பெரிய வங்கிகளில் பஞ்சாப் தேசிய வங்கியும் ஒன்றாகும். பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பரோடா வங்கி ஆகியவை மற்ற மூன்று பெரிய வங்கிகளாகும். மொத்த சொத்துக்களின் அடிப்படையில், (2012-13 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) பஞ்சாப் தேசிய வங்கி இந்திய வங்கிகளில், மூன்றாவது பெரிய வங்கியாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Origin of PNB". Punjab National Bank. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  2. "History of PNB". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Annual Report 2012-13" (PDF). PNB. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  4. 4.0 4.1 4.2 "Financials Information for Punjab National Bank". Hoover's. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.

இதனையும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_தேசிய_வங்கி&oldid=3359972" இலிருந்து மீள்விக்கப்பட்டது